4 ம்-சங்கீதம். சங்கீத விளக்கம்

 சங்கீத விளக்கம்


4 ம்-சங்கீதம் 


தலைப்பு:-

“விசுவாசிகளின் பாதுகாப்பு”


பிரிவு:-


  • வசனம்-1 ஜெபத்தை கேட்க்கும்படி வேண்டூதல்.

  • வசனம்-2 தேவனின் இரு கேள்விகள்

  • வசனம் -3 - 5 சமாதானத்திற்க்கான செயல்கள்,

  • வசனம் -6 கர்த்தரின் முகத்தின் ஒளி பிரகாசிக்க வேண்டுதல்,

  • வசனம் -7- 8 விசுவாசத்தின் விளைவு, மகிழ்ச்சி, சமாதானம், சுகம்.


வசனங்களுக்கான

விளக்கம்:-


வசனம்.3:- கர்த்தரிடம் பக்தியாய் இருப்பவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.அவர்களின் விண்ணப்பங்களை அவர் கேட்கிறார். “என் ஜெபத்தை கர்த்தர் கேட்பதில்லை” என்று ஒரு நாளும்  யாரும் சொல்லவும் சந்தேகபடாவும் கூடாது, பதில் வர தாமதமாகலாம் அல்லது எதிர்பார்க்காத பதில் கூட வரலாம். எதுவாயினும் நமது நண்மைகே என்பதே தான் உண்மையாகும். பக்தியுள்ளவன் கர்த்தர் அவருக்கென்று தன்னை  தெரிந்து கொண்டதற்காக  கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும். பத்தியுள்ளவனை எதிர்க்கிறவன் கர்த்தருக்கு எதிரியாக இருப்பான்.


வசனம் 4:- கோபங்கொண்டாலும் அதை அடக்கி ஆள வேண்டும். பாவம் செய்யும் அளவிற்க்கு கோபப்பட கூடாது (எபே 4:26). வீனானதை அல்ல அடிக்கடி கர்த்தரையும், அவரின் செயல்களையும், வேதத்தையுமே சிந்துத்து கொண்டிருங்கள்.


வசனம் .5:- நீதியின் பலிகள் எவை? கர்த்தருக்கு கீழ்ப்படிதல் (1சாமு 15:22; சங் 51:17), 

கர்த்தரை துதித்தல் (எபி 13:15). கர்த்தருக்கு பயந்து பரிசுத்தமாய் வாழ்வது (ரோம 12:1), 

இரக்கம் செய்தல் (மத் 9:13; 12:7).


வசனம் .6:- கர்த்தரின் முகத்தின் ஒளி நம்மீது பிரகாசித்தல் என்றால் என்ன? அவரது ஒளி (நற்பண்புகள், ஆற்றல்) நம்மீது பிரதிபலித்து மற்றவர்களுக்கு காணப்பட வேண்டும் என்பதாகும். இப்படிபட்ட விண்ணப்பம் சிறந்ததாகும். இதை உனர்ந்து இதை செய்வோமாக.


வசனம் .7 - இருவித மகிழ்ச்சிகள் உண்டு. உலக பிரகாரமான மகிழ்ச்சி, ஆவிக்குரிய மகிழ்ச்சி. இதில் உங்கள் மகிழ்ச்சி எத்தகையது?


வசனம் .8:- மாலை நேரத்தில் பாடப்பட்ட சங்கீதம் இது. நம்பிக்கை நிறைந்தது. அமைதியான நேரங்களிலும் ஓய்வெடுக்கும் பொழுதும் மனகவலை, கலக்கம் அதிகமாக தாக்குகின்றன. மாலையில் உறங்குவதில் மட்டுமின்றி, நமது வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும் “கர்த்தர் பார்த்துக் கொள்வார்” என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருந்து அவருக்கு காத்திருக்க

கற்றுக்கொள்வோமாக……




Post a Comment

0 Comments