இயேசுவை வணங்காத மனிதர்களும் ஆசீர்வாதங்களுடன் வளமாக வாழ்கிறார்களே எப்படி ❓

 இயேசுவை வணங்காத மனிதர்களும் ஆசீர்வாதங்களுடன் வளமாக வாழ்கிறார்களே எப்படி ❓


தன்னை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரம்தான் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடவுளாக இருக்கிறாரா?


வேறு வேறு கடவுளை வணங்குபவர்களும் ஆசீர்வாதங்களை பெறுகிறார்கள். சன்மார்க்கனும் ஏன் துர்மார்க்கர்களும்  ஆசீர்வாதம் பெற்று வளமாக வாழ்கிறார்களே. உலகத்தை அனுபவிக்கிறார்கள். மெய்யான தேவனை வணங்கும் நமக்கு அந்த ஆசீர்வாதம் கிடைப்பல்லையே.  இவர்களுக்கெல்லாம் உதவி செய்வது யார்❓


இந்த கேள்வி என் மனதில் அநேக ஆண்டுகளாகயிருந்தது.


இந்த கேள்விக்கு பதில் சாது சுந்தர் செல்வராஜ் அய்யா மூலம் கிடைத்தது.

சர்வத்தையும் படைத்த சர்வ வல்ல தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவே உலக மக்கள் எல்லோருக்கும் பாரபட்சமில்லாமல் என்றும் மாறாதவராக அருள் புரிந்து வருகிறார் என்பதை அறிந்துக் கொண்டேன். தான் படைத்த எல்லா படைப்புகளை காத்து வருகிறார். மழையைப் பொழிகிற தேவன் நல்லோர் தீயோர் என்று பார்ப்பதில்லை.எல்லோருக்கும் நீரை அருள்கிறார். தேவன் படைத்த சூரியன் சந்திரன் எல்லோருக்கும் ஒளியைத் தருகிறது. இரட்சிப்புக்குள் வராதவர்கள் பூலோக வாழ்க்கையில் சந்தோசமாகயிருக்கட்டுமே என கர்த்தர் நினைக்கிறார். 

எவ்வளவு பெருந்தன்மை உள்ள மகா இரக்கமுள்ள அன்பான தேவன்!


அவர் உலகத்தின் இரட்சகராக வெளிப்பட்டார். தேவனின் அவதாரமாக வந்தார். ஆவியாய் ஒளியாயுள்ள தேவன் சரீரத்தில் வெளிப்பட்டார். கடவுளே என்று கூப்பிடுகிற உதடு அவர் இயேசு கிறிஸ்துவே என அறியட்டும். இதயப்பூர்வமாக அறியட்டும். இந்தக் கடைசி காலங்களில் கர்த்தர் தன்னை இஸ்லாம் சகோதர சகோதரிகளுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்கள் உண்மையான தெய்வத்தை அறிந்து வைராக்கியமாக இயேசுவை அறிவிக்கிறார்கள். கர்த்தர் இந்த உலகத்தை குணமாக்க உலகம் முழுதும் தன் தீர்க்கதரிசிகள் கூட்டத்தை எழுப்பி வருகிறார். சகோதர சகோதரிகளே  உங்களை சுற்றியுள்ளோர் இரட்சிக்கப்பட உருக்கமாக ஜெபியுங்கள்._


தேவனை அண்டிக் கொள்கிற நாம் பாக்கியவான்கள். பரலோகத்திற்க்குரியவர்கள். ஆனாலும் நம் முடிவு பரியந்தம் இரட்சிப்பில் நிலைத்திருக்க வேண்டும். ஆனால் இரட்சிக்கப்படாத தேவனை அண்டிக் கொள்ளாத மக்கள் பரலோகத்தை தவற விடுகிறார்கள்.

Post a Comment

0 Comments