அசீரியா தேசம் || அறிந்து கொள்வோம் பகுதி -119 ||

அறிந்து கொள்வோம்

 பகுதி -119

Assyria – அசீரியா தேசம்

1.இது ஆதியில்‌ டைக்ரிஸ்‌ என்னும்‌ இதெக்கேல்‌ (ஆதி.2:14) ஆற்றின்‌ ஒரத்தில்‌ அசூர், நினிவே என்னும்‌ பட்டணங்களைச்‌ சுற்றிலும்‌ இருந்த ஒரு ராஜ்யம்‌. அசீரியாவின் எல்லைகள் வெவ்வேறு காலகட்டங்களில் பெரிதும் வேறுபடுகின்றன, அநேகமாக, ஆரம்ப காலங்களில், இது டைக்ரிஸின் இடது கரையில் முக்கியமாக அமைந்திருந்த தாழ்வான ஒரு சிறிய பகுதிக்குள் மட்டுமே இருந்தது.படிப்படியாக அதன் வரம்புகள் நீட்டிக்கப்பட்டன, இது வடக்கில் ஆர்மேனிய மலைகளுக்கு இடையே உள்ள முழுப் பகுதியையும், தெற்கில் பாக்தாத் நாட்டையும் உள்ளடக்கியதாகக் கருதப்படுகின்றன. கிழக்கில் அதன் எல்லை ஜாக்ரோஸ் அல்லது குர்திஸ்தானின் மலைகளின் உயரமான மலைத்தொடராக இருந்தது; மேற்கில் சிலரின் கருத்துகளின்படி, மெசபடோமியா பாலைவனம் எல்லையாக இருந்தது, மற்றவர்களின் படி அது யூப்ரடீஸ் ஆக இருந்தது.அதன் பெயர் வெளிப்படையாக சேம் இன் மகன் ஆஷூரிலிருந்து பெறப்பட்டது, Gen:10:22, இவர் பிற்காலத்தில் அசீரியர்களின் பிரதான கடவுளாக வழிபடப்பட்டார்.

2.இதின்‌ ஜனங்கள்‌ யுத்தஞ்செய்வதிலும்‌, முற்‌றிகை போடுவதிலும்‌ திறமைசாலிகள் கோட்டையைக்‌ காப்பதில்‌ பராக்கிரமசாலிகள்‌. கொள்ளையடிப்பதற்குத்‌ தூரமான இடங்களுக்குப்‌ போக விரும்புகிறவர்கள்

3.இவர்கள்‌ நாகரீகமுள்ளவர்களாய்‌ இருந்தார்கள்‌. இவர்களுடைய ராஜ்யம்‌ பாபிலோன்‌ ராஜ்யத்திலிருந்து
பிரிந்ததினாலும்‌ இதற்கும்‌ அதற்கும்‌ சம்பந்‌தம்‌ இருந்ததினாலும்‌ இவர்கள்‌ பாபிலோனியர்களைப்‌
போலவே இருந்தார்கள்‌ என்று நாம்‌ நினைக்க வேண்டும்‌.

4.இவர்களும்‌ பாபிலோனியரும்‌ பல தேவர்களைத்‌ தொழுதுவந்தார்கள்‌. ஆனால்‌ இவர்கள்‌ அசூர்‌ என்னும்‌ முக்கிய ஸ்தலத்திலே பாபிலோனியர்‌ வணங்காத “அசூர்‌” என்னும்‌ தங்கள்‌ தேசத்தைக்‌ காப்பாற்றுகிற தேவனைத்‌ தொழுது வந்தார்கள்‌.பாபிலோன்‌ தேசத்தில்‌ ராஜாக்களைவிட ஆசாரியர்களுக்கே அதிகாரம்‌ அதிகமாய்‌ இருந்தது.அசீரியாவிலே ராஜாதான்‌ பிரதான ஆசாரியனாய்‌ இருந்ததினால்‌ ஆசாரியர்‌ அவனுக்குட்‌ பட்டவர்களாய்‌ இருந்தார்கள்‌.சரித்திரம்‌ ஏறக்குறைய கிமு. 2100ம்‌ வருடத்தில்‌ அதாவது ஆபிரகாம்‌ தான்‌ பிறந்த இடத்தை விட்டுக்‌ கானான்‌ தேசத்திற்குப்‌ புறப்பட்டுப்போன காலம்‌ துவங்கி கிமு. ஆறாம்‌ நூற்றாண்டு வரையில்‌, ஒரு 1700 வருடங்களாக அசீரியா ராஜ்யம்‌ இருந்தது. இந்த ராஜ்யம்‌ நேபுகாத்நேச்சார்‌ பாபிலோனின்‌ ராஜாவாக வருகிறதற்கு இரண்டு வருடத்துக்கு முந்தி மேதியராலே ஜெயிக்கப்பட்டது. இந்த ராஜ்யத்தினதும்‌
பாபிலோன்‌ ராஜ்யத்தினதும்‌ சரித்திரம்‌ ஒன்றோடொன்று கலந்திருக்கிறது.



Post a Comment

0 Comments