தல்மூத் || அறிந்து கொள்வோம் || பகுதி - 123 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 123


தல்மூத்

Talmud

Religious text



தல்மூத் என்பது யூதப்போதக மற்றும் யூதத்தில் மைய சமய நூல்களின் ஒன்று. இது பாரம்பரியமாக "சாஷ்" என அழைக்கப்பட்டது.இது பூர்வீக யூத  ரபிமார்களால் தொகுக்கப்பட்ட பாரம்பரியமாகும். இது லமீத் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. லமீத் என்றால் 'To Teach' என்று அர்த்தம். தல்மூத்தின் இரு பிரிவு : 

1.மிஷ்னா 2.ஹெமரா


1.மிஷ்னா :- மிஷ்னரி என்பது வாய்மொழியாய் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம். கி.பி. 2ம் நூற்றாண்டு வரை வாய்மொழியாய் வந்தது தான் மிஷ்னா.


2.ஹெமரா :- ஹெமரா என்றால் வியாக்கியானம்.கி.பி.3ம் நூற்றாண்டு வரை இடையே தொகுக்கப்பட்ட வியாக்கியான உரையே ஹெமாரா. இந்த வியாக்கியான உரை பாபிலோனியாவிலும்,

எருசலேமிலும் உள்ள யூத அறிஞர்கள் வாய்மொழி பாரம்பரிய மிஷ்னாவிற்கு கொடுத்த விளக்கவுரை த் இது.


இதுவும் இரு வகைப்படும்.


1.கலாஹா:-

நியாயப்பிரமாணத்திற்குரிய சாரம் மற்றும் சத்திற்குரிய விளக்கவுரை.


2.கஹாடா:- 

இது பொதுவான போதனை. கலாஹாவில் சேர்க்கப்படாத எல்லா போதனையும் இதில் அடங்கும்.


தல்மூத் என்பதில் 63 பிரிவுகள் இருக்கிறது.ஒவ்வொரு பிரிவும் நியாயப்பிரமாணத்தின் அம்சத்தை கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.அதை வலியுறுத்துகிறது.


தல்மூத் என்பதும் இருவகை இருக்கிறது.


1.பாலஸ்தீன பண்டிதர்களால் அங்கீகரிக்கப்பட்ட தல்மூத்.


2.பாபிலோனிய பண்டிதர்களால் அங்கீகரிக்கப்பட்ட தல்மூத்.


இதில் அளவில் குட்டையானது பாலஸ்தீன தல்மூத்.இது மேற்கத்திய அரமேயு மொழியல் எழுதப்பட்டது. பாபிலோனிய தல்மூத் கிழக்கத்திய அரமேயு மொழியில் எழுதப்பட்டது. இரண்டும் முற்றுபெறாதது. சில பகுதிகள் இல்லை. கி.பி.13ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபைகளில் தல்மூத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் இதன் நகல் எரிக்கப்பட்டன. இருந்தாலும் இது இன்றும் உயர்வுள்ள இலக்கியமாக உள்ளது. 





Post a Comment

0 Comments