எலியேசர் || அறிந்து கொள்வோம் || பகுதி -121 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -121


எலியேசர் 

Eliezar 

"எலியேசர்"கடவுள் உதவியாய் இருக்கிறார்" (God is his help).

1.ஆபிரகாமின் பிரதான வேலைக்காரன், அவன் “தமஸ்குவின் எலியேசர்” என்று அழைக்கப்பட்டான். ஆதி -15:2. (பி.சி. 1857).

2.மோசே மற்றும் சிப்போராளின் இரண்டாவது மகன், (கி.மு. 1523), “என் பிதாவின் தேவன் எனக்கு துணைநின்று,பார்வோனின் பட்டயத்திலிருந்து என்னை தப்புவித்தார்” என்பதற்காக அவரது தந்தை இந்த பெயரைக்கொடுத்தார்.(யாத் -18:4; 1நாளா -23:15; 1நாளா-23:17; 1நாளா-26:25)

3.பெகேரின் மகன்களில் ஒருவன், பென்யமினின் மகன். 1 நாளா-7:8.

4.தாவீதின் ஆட்சியில் இருந்த ஒரு ஆசாரியன் 1 நாளா -15:24.

5.தாவீதின் ஆட்சியில், ரூபன் கோத்திரத்திற்குத் தலைவன், சிக்ரியின் மகன் எலியேசர். 1நாளா-27:16.

6.மரேசா ஊரானாகிய தொதாவாவின் மகனான எலியேசர் 2 நாளா-20:37, இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியாவுடன் தன்னை இணைத்துக் கொண்டதற்காக யோசபாத்தை கண்டித்த தீர்க்கதரிசி. 

(கி.மு. 895).

7.சில லேவியர்களையும் நிதனீமியர்களையும் எருசலேமுக்குத் தம்முடன் அழைத்துச் செல்ல, எஸ்றா மற்றவர்களுடன் அகாவாவிலிருந்து கசிப்பியாவுக்கு அனுப்பிய ஒரு முக்கியமான இஸ்ரவேலன்.எஸ்ரா -8:16. (கி.மு. 459).

8.அந்நிய மனைவியை மணந்திருந்த ஒரு ஆசாரியன்.எஸ்ரா-10:18;

9.அந்நிய மனைவியை மணந்திருந்த ஒரு லேவியன் எஸ்ரா-10:23;

10.அந்நிய மனைவியை மணந்திருந்த ஒரு இஸ்ரவேலன் . எஸ்ரா-10:31.

11.யோரீமின் குமாரன்,கிறிஸ்துவின் வம்சாவளியில். லூக்கா-3:29.

Post a Comment

0 Comments