அத்தாலியாள் || அறிந்து கொள்வோம் || பகுதி -115 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -115


அத்தாலியாள்



"அத்தாலியாள்" என்ற எபிரேய பெயருக்கு  (Athalyah - Athalyahuw) "கர்த்தரால் ஒடுக்கப்பட்டவர்" (afflicted of the lord)என்றும் "கர்த்தர் மேன்மையடைகிறார்"  என்று சொல்லப்படுகிறது.


யூதா தேசத்தில் 7-ம் மகாராணியாக ஏழு வருடங்கள் ஆட்சி செய்த இவள் வடக்கு ராஜ்ஜியமாகிய இஸ்ரவேலனின் 7-ம் அரசனாகிய ஆகாபுக்கும் யேசபேல் (சீதோனியர்களின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தியும்,பாகால் வணக்கத்தை இஸ்ரவேலில் அறிமுகப்படுத்தியவள்- 1 இராஜ16:31)

என்பவர்களின் குமாரத்தி ஆகும் .இவளை (அத்தாலியாள்)தெற்கு ராஜ்ஜியமாகிய யூதாவின் 6- ம் அரசனாகிய யோராம் விவாகம் செய்தான்.

(2 இராஜ 8:18,2 நாளாக 21:6).

யோராம் மரித்தபோது அவனுடைய மகனும் அத்தாலியாளின் குமரனுமாகிய அகசியா யூதாவிலே 6-ம் அரசனானான்.ஒரு வருடத்தில் யெகூ அகசியாவைக் கர்த்தருடைய வார்த்தையின் படி கொன்றான். அப்பொழுது அத்தாலியாள் இராஜவம்சத்தாராகிய தன் பேரப்பிள்ளைகளைக் கொன்று விட்டு, தானே ஆட்சியை எடுத்துக் கொண்டாள். 

(2 நாளாக 22:10-11)

யோராமின் குமாரர்கள் கொல்லப்பட்டபோது அவனுடைய இளையமகனாகிய யோவாசை, யோராமின் சகோதரியும், ஆசாரியனாகிய யோய்தாவின் மனைவிமாகிய யோசேபியாத் அவனை மட்டும் தப்பவைத்தாள். யோவாஸ் ஆறு வருஷமாகக்  ஆலயத்தில் வைத்து வளர்க்கப்பட்டான்.அத்தாலியாள் மூலமாக பாகால் வழிபாடு யூதாவிலே உச்சநிலை அடையந்தது.அவளது தாய் யேசபேலை போலவே மிகுந்த அதிகாரம் செலுத்தி  இரத்த வெறியோடு 7 ஆண்டுகள் ஆட்சி செய்தாள்.பாகாலின் பெயரால் ஆலயத்தை வியாபாரக் கூடமாக்கி தேசத்தை கெடுத்து போட்டாள்.ஆசாரியனாகிய யோய்தா ஏழாம் வருடத்தில் யோவாசை அரசனாக முடி சூட்டினான். மக்கள் அவனை யூதாவின் அரசனாக ஏற்றுக் கொண்டார்கள்.இதை அறிந்த அரசியாகிய அத்தாலியாள் அதை தடுக்கமுயன்றாள்.போர் வீரர்கள் முன் தான் ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்து தப்பியோட முயன்றபோது கொல்லப்பட்டாள். இதனால் எருசலேமிலே பாகால் வழிபாடு முடிவுக்கு வந்தது. 

( 2 இராஜ 8:26/ 11:1-14-

2 நாளாக 22:2-4/ 23:13-21 /24:7 )



Post a Comment

1 Comments

  1. New update about her, Thank you pastor ji.. keep on update the new messages..

    ReplyDelete