சிலுவை வரலாறு || பகுதி -10 ||

சிலுவை வரலாறு 

பகுதி -10



சிலுவையும் - ஈட்டியும்:-



A.முன் குறிப்புகள்:

ஈட்டி, இயேசுவைக் கொலை செய்யப் பயன்படுத்தின ஆயுதங்களில் கடைசி ஆயுதமாகும். இயேசு சிலுவையில் மரித்துவிட்டாரா, இல்லையா என்பதை உறுதிச் செய்ததும் இந்த ஈட்டிதான். மனிதர்களின் பற்களுக்கு இணையாகவும் ஈட்டி விவரிக்கப்பட்டுள்ளது(சங் 57:4). 

அந்த அளவுக்கு அந்த காலத்து மனிதர்களின் வார்த்தைகள் மிகக் கூர்மையாகக் காணப்பட்டது. புதிய ஏற்பாட்டில் ஈட்டியைக் குறித்து அதிகமாய் எதுவும் சொல்லப்படாமல், இரண்டு இடங்களில் மட்டும் ஈட்டியைக் குறித்த சம்பவம் வருகின்றது. 

(யோவா 19:34; அப் 23:23). வேதாகமத்தில் முதன் முதலில் ஈட்டியைப் பயன்படுத்தினது இரண்டு பேரை குத்தி கொலை செய்வதற்க்காகத்தான். வேதத்திலுள்ள பழைய ஏற்பாட்டு ஆகமங்களில் எண்ணாகமம் முதல் ஆபகூக் வரையிலான 18 புஸ்தகங்களிலும், புதிய ஏற்பாட்டில் யோவான் மற்றும் அப்போஸ்தல நடபடிகளிலுமாக ஏறத்தால 20 புஸ்தகங்களில் ஈட்டியைக் குறித்து பல விதத்திலும் சொல்லப்பட்டுள்ளது.



"ஆகிலும், போர்ச்சேவகர்கரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.(யோவா 19:34)


ஆம், இயேசுவைத் தொட்ட பொருட்களில் ஈட்டி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஈட்டி என்றால் "உருவ குத்துதல்" என்று அர்த்தமாகும்.

(ஆபகூக் 3:14). இயேசு சிலுவையின் மேல் தொங்கி கொண்டிருக்கையில், கீழே இருந்து இயேசுவை ஈட்டியினாலே உருவக் குத்தினான். அதனால் இயேசுவின் சரீரத்திலிருந்து முதலாவது இரத்தமும் இரண்டாவது தண்ணீரும் புறப்பட் டது.


இரத்தம் என்பது ஜீவனையும், தண்ணீர் என்பது ஆரோக்கியத்தையும் குறிக்கும். ஆம், இயேசு நமக்காக ஜீவனை மட்டும் கொடுக்காமல், தன்னுடைய ஆரோக்கியத்தையும் கொடுத்துள்ளார். பழைய ஏற்பாட்டில் யோசுவா ஈட்டியை நீட்டினபடியினால் ஆயி பட்டணத்தை ஜெயித்தான். புதிய ஏற்பாட்டில் ஓர் வீரன் ஈட்டியை நீட்டினபடியினால் இயேசுவின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.


அதே சமயம் ஈட்டி என்பது நம்முடைய வாயிலுள்ள பற்களுக்கு ஒப்பிட்டும் சொல்லப்பட்டுள்ளது [சங்57:4). இயேசு நமக்காக ஈட்டிக்கொப்பான வார்த்தைகளை நிறுத்தி, கிறிஸ்து இயேசுவை மகிமைப்படுத்தும் வார்த்தைகளை மட்டும் பேசினால், மீண்டும் இயேசுவை நாம் சிலுவையில் அறையாது இருப்போம்.


உங்கள் கையில் இருக்கும் ஈட்டி உங்கள் எதிரிகளைதான் பயமுறுத்த வேண்டுமேயொழிய, உங்கள் ஈட்டி உங்களையே பயமுறுத்தக் கூடாது என்பதை முதலாவது தெரிந்து கொள்ளுங்கள்.


சவுல் இராஜா தாவிதை கொல்வதற்காக ஏறத்தாழ மூன்று முறை ஈட்டியை எறிந்தான். ஆனாலும் தாவீது அந்த ஈட்டியின் ஆபத்திலிருந்து தப்பினான். அதுபோல, உங்களுக்கு விரோதமாக

வருகின்ற எந்தவிதமான ஈட்டியானாலும் உங்களைத் தாக்காது.

காரணம், இயேசு உங்களுக்காக ஈட்டியினால் குத்தப்பட்டு விட்டார். "என்னைத்துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்” (சங் 35:3).


ஈட்டியைக் குறித்து பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்ற இரண்டு பகுதியிலிருந்தும் வாசிப்போம், தியானிப்போம். கிருபையைப் பெறுவோம், நல்ல ஈட்டியாக மாறுவோம்.


B.சில புள்ளி விபரங்கள்:-


1.இயேசுவைக் குத்தின ஈட்டியின் நீளம் 8 அடி ஆகும். இயேசுவின் 3-க்கும் 4-க்கும் இடைப்பட்ட விலா எழும்பு பகுதியில் ஈட்டியால் குத்தப்பட்டார்.


2.இயேசுவை ஈட்டியால் குத்தின போர்வீரனின் பெயர் "லொங்கினியஸ்" ஈட்டியின் முன் அலகு பகுதி 2 அங்குலம் உடையதாக இருந்தது.


3.ஈட்டி என்பது போர்வீரர்களின் மூன்றாம் கை என்று பொருள்.


4.ஆரம்ப காலத்தின் ஈட்டிகள் மரக்கழியினால் செய்யப்பட்டதாயிருந்தது.


5.ஈட்டிக்கு சாமரம், வளரி, எறியீட்டி, சூலம், சூலாயுதம், குத்தீட்டி, ஓரி, வேல், கதாயுதம், தோமரம் என்கிற 10 வித பெயர்களும் உண்டு.


6.கோலியாத் பயன்படுத்தின ஈட்டியின் முன் அலகு மட்டும் ஆறு சேக்கல் அதாவது 7 கிலோ 700 கிராம்.


7.சில ஈட்டிகளின் பின்பகுதியும் கூர்மையாக இருக்கும் - 2சாமு 2:23. அதனால்தான் அப்னேர், ஆசகேலை ஈட்டியின் பின்புறத்தினால் குத்திக் கொன்றான்.


8.யூத ஈட்டிகளை தரையில் குத்தி நிறுத்தினால் மட்டும்தான் நிற்கும். ஆனால், எகிப்திய ஈட்டிகள் தரையை காயப்படுத்தாமல் சமதள தரையிலும் நிற்க கூடியவை.


9.ஈட்டிகளுக்கு JAVELIN (ஜாவ்லின்), SPEAR (ஸ்பையர்), LANCE (லான்ஸ்), DART (டார்ட்), HKANITH [ஹானித்) RO'MAHH (ரோமாஹ்), KIDDHON (கித்தோன்), MS'SSA (மாஸா), SHE'LAHH (சேலா), LOG'KHE (லோக்) என்கிற 10 ஆங்கில பெயர்களும் உண்டு.


10.வேல் என்பதும் ஈட்டிதான் ஆனால் அம்பைவிட பெரியது, ஈட்டியை விட சிறியது.


11.இயேசுவை ஈட்டியால் குத்தின போர்ச்சேவகன் ஏற்கனவே ஒரு கண்ணின் பார்வையை இழந்து, ஒற்றைக் கண்ணணாக இருந்ததாகவும், இயேசுவை ஈட்டியால் குத்தினபோது தெரித்த ஒரு சொட்டு இரத்தம் அவன் கண்ணில் பட்டதால் அவன் பார்வையடைந்ததாகவும் ஒரு பின் செய்தி உண்டு.


C.உவமையாய் சொல்லப்பட்டுள்ள சில ஈட்டிகள்:


1.எண் 25:8  - உருவபோகும்படி குத்தும் ஈட்டி.


2.1சாமு 17:47  - இரட்சிக்க மாட்டாத ஈட்டி.


3.1நாளா 20:5  - படைமரம் போன்ற ஈட்டி.


4.11நாளா 14:8 -  யூதாவின் ஈட்டி.


5.நெகே 4:21 - பிடித்திருந்த ஈட்டி.


6.சங் 57:4  - பற்களுக்கு ஒப்பான ஈட்டி.


D.ஈட்டியைக் குறித்து பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள சில குறிப்புகள்:


a.எண் 25:7 - ஈட்டியை முதன்முதலில் பயன்படுத்தினது ஆரோனின் பேரனாகிய பினெகாஸ்.


b.2சாமு 21:16 - வேதத்திலேயே மிக அதிக கனமுள்ள ஈட்டியை வைத்திருந்தவன் இஸ்பிபெனோப் என்பவன். 

அவனுடைய ஈட்டியின் எடை முழுவதும் வெண்கலத்தினாலான 300 சேக்கல் நிறையாய் இருந்தது.


C.1சாமு 17:7  - கோலியாத் பயன்படுத்தின ஈட்டியின் நீளம் 7.9 மீட்டர் [26அடி). அவனுடைய ஈட்டியின் அலகு (நுனி) பகுதியின் எடை மட்டும் 7கிலோ 700கிராம் ஆகும்.


d.2சாமு 23:18 ,1 நாளா 11:11 -

ஒரு ஈட்டியின் மூலம் ஒரு மனுஷன் ஒரே நேரத்தில் 300பேரை மடங்கடித்த சரித்திரமும் உண்டு.


e1சாமு 19:9 - பழைய ஏற்பாட்டில் ஈட்டியை அதிகமாக பயன்படுத்தினது சவுல் ராஜாதான்.காரணம்  அவன் வீட்டில் அமர்ந்திருக்கும் போது கூட கையில் ஈட்டியைப் பிடித்திருப்பான் (1சாமு 19:9).


f.எண் 25:8 -  வேதாகமத்தில் ஈட்டியை முதன் முதலில் கொலை செய்வதற்க்காகத்தான் பயன்படுத்தப்பட்டது.


g.1சாமு 26:8, 2சாமு 2:23-

ஈட்டியினால், மனுஷனை ஒருமுறைக் குத்தினால், மறுபக்கம் புறப்பட்டு தரையில் போய்த் தட்டும்.


h.1சாமு 17:45 - ஈட்டியின் துணை ஆயுதங்கள் இரண்டு. ஒன்று:பட்டயம், இரண்டு: கேடகம்.


i.ஆப 3:11 - ஈட்டியை சூரியனுக்கும், சந்திரனுக்கும் இணையாக கருதினார்கள்.


j.1சாமு 17:47 - கர்த்தர் ஈட்டியைக் கொண்டு இரட்ச்சிக்கிறவர் அல்ல.



E. நன்மை செய்த ஈட்டிகள்:-


a.யோசு 8:18,26 - யோசுவாவின் நீட்டப்பட்ட ஈட்டி, ஆயி பட்டணத்தை இஸ்ரவேலருக்குத் தந்தது.


b.1நாளா 11:11-  "யாஷோபியாமின்" ஈட்டி 300 பேரை கொன்றுப் போட்டு தாவிதுக்கு வீரத்துவத்தைக் காண்பித்தது.


C.ஆபகூ 3:11 - ஆபகூக் தீர்க்கதரிசி சொன்ன ஈட்டி, மின்னலின் பிரகாசத்தைப் போல கர்த்தருக்காக நடந்தது.


d.நாகூ 3:3,1 - நாகூம் தீர்க்கதரிசி சொன்ன ஈட்டி வஞ்சகத்தினாலும், கொடுமையினாலும் நிறைந்தவர்களுக்கு முன்பாக மின்னி அவர்களை நடுங்க வைத்தது.


e.எண் 25:7,8  - உருவக்குத்தின பினெகாஸின் ஈட்டி இஸ்ரவேல் புத்திரரின் வாதையை நிறுத்திப் போட்டது.


f.1சாமு 19:10 -  தாவீதை கொல்லும்படி சவுல் எரிந்த ஈட்டி, சுவரிலே போய்ப்பட்டு, தாவீதைத் தப்புவிக்கப் பண்ணினது.


g.1சாமு 26:12,7 கர்த்தர் அயர்ந்த நித்திரை வரப்பண்ணினதால், சவுலின் ஈட்டி தரையிலே குத்தப்பட்டு, தாவிதும், அபிசாயும் தப்புவிக்கப்பட்டனர்.


Notes taken from

Rev.SSK.Samuel

Post a Comment

0 Comments