கிறிஸ்தவத்தின் வளர்ச்சிஆய்வு கட்டுரைகள்

 ஆய்வு கட்டுரைகள்


கிறிஸ்தவத்தின் வளர்ச்சி


கிரேக்க மற்றும் ரோமானிய உலகில்

கிறிஸ்தவ மதத்தின் தோற்றம் வளர்ச்சி என்பது ஒரு ஆச்சரியமான ஒன்று. ஏனெனில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு

ரோமானியர்கள், கிரேக்கர்கள் மற்றும் யூதர்கள் சிறப்பான பங்களித்தார்கள்.

அவையாவன:

1.ரோமானியர்களின் பங்களிப்பு

2.கிரேக்க பங்களிப்பு

3.யூதர்களின் பங்களிப்பு


1.ரோமானியர்களின் பங்களிப்பு: 


ரோம பேரரசு முழுவதும் கிறிஸ்தவம் தடையின்றி பரவுவதற்கு ரோமானியர்களின் சட்டம், அரசியல் பொருளாதாரம் கலாச்சாரம் எல்லாம் மிகவும் உதவியாக இருந்தது.


அரசியல் பங்களிப்பு:


ரோம பேரரசு கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு சாதகமான அரசியல் சூழ்நிலையை உறுவாக்கிற்று. எப்படியெனில் அகஸ்து ராயன் (கிமு 27) ஆட்சிக் காலத்தில்தான் par Komama அல்லது -ரோமானிய அமைதி" ஆரம்பமானது. இது கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு சாதகமாக இருந்தது.


சட்டபூர்வ பங்களிப்பு: 


ரோமானிய பேரரசு உலகத்திற்கே காவலர்களாக இருந்து வன்முறைகள் மற்றும் சட்டவிரோத காரியங்கள் நடைபெறாமல் காத்துக்கொண்டார்கள், இவர்கள் உலகலாவிய சட்டமுறையை (Universal aw) ஏற்படுத்தி எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நீதிபதி இருக்கிறார் என்ற உணர்வை ஏற்படுதியது. ரோமானியரல்லாதவர்களுக்கு, ரோமானிய குடியுரிமையை வழங்கினார்கள். இது கிறிஸ்தவர்கள் பரலோக குடியுரிமையை கொண்டவர்கள் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது (பிலி 3: 20),


மதங்களின் பங்களிப்பு: 


ரோமானியர்களின் அடுத்தடுத்த வெற்றிகளால் பல மத இன மக்கள். தங்களின் தெய்வங்கள் மீது நம்பிக்கை இழந்தார்கள். பண்டய காலத்தில் ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது படையெடுத்து வெற்றி பெற்றால் தோல்வியுற்ற நாட்டின் தெய்வங்களும் தோற்றவர்களாக கருதப்படுவார்கள், இதனால் அவர்களிடத்தில் ஒரு ஆன்மீக வெற்றிடம் கானப்பட்டது. கிறிஸ்தவத்தின் நற்செய்தி மூலமாக இவர்கள் தொடப்பட்டு பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டார்கள்.


ரோமானிய இராணுவம்:-


ரோமானிய பேரரசில் எதிரிகளால் வெற்றி கொள்ள முடியாத அளவிற்கு வலிமைவாய்ந்த இராணுவமும் தொழிற்நுட்பமும் இருந்தது. இவர்கள் கொடுத்த பாதுகாப்பினால் ஆதி  திருச்சபை நற்செய்தியாளர்கள் பயமின்றி எல்லா இடங்களுக்கும் சென்று. எல்லா மனிதர்களுக்கும் கவிசேஷந்தை அறிவிக்க எளிமையாக இருந்தது. மேலும் ரோம பேரரசில் அநேக கிறிஸ்தவர்கள் இராணுவ வீரர்களாக பணியாற்றியதால் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் தங்களுடைய சக வீரர்களுக்கு கிறிஸ்துவின் தற்செய்தியை அறிவித்ததினால் பல வீரர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். குறிப்பாக கிறிஸ்தவ இராணுவ வீரர்கள் மூலமாகத்தான் இங்கிலாந்து தேசத்தில் முதலாவது கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தினார்கள்.


சாலை போக்குவரத்து:-


ரோம தொழில்நுட்பத்தில் உருவான

கண்டுபிடிப்புகள் மூலமாக ரோம பேரரசு முழுவதும் வலிமையான சாலை போக்குவரத்து அமைத்து, பலநகரங்களை இணைத்தார்கள், இதன் மூலம் கிறிஸ்தவ மிஷனெரிகள், கைவினை கலைஞர்கள், சிறு தொழில் செய்பவர்கள் பல இடங்களுக்கு பயணம் செய்து, கிறிஸ்வின் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார்கள். ரோமானியப் பேராசு முழுவதும் பொதுவான மொழி பேசப்பட்டதால், கிறிஸ்தவம் மிகவும் விரைவாக பரவியது.


ரோமானிய சட்ட ஒழுங்கு:-


ரோமானியப் பேரரசில் சட்ட ஒழுங்குகளை பாதுகாக்க சிறப்பான

காவல்துறை உறுவாக்கப்பட்டிருந்ததால் யூத மதந்தலைவர்களிடமிருந்து ரோமானிய காவல்துறையினர் பவுல் அப்போஸ்தலனை கொலை செய்யும் முயற்சியிலிருந்து பாதுகாத்துக் கொண்டார்கள், இல்லையென்றால் நிச்சயமாக பவுல் இறந்திருப்பார் 

(அப் 23:/2 13, 23-25). அப்படி நடத்திருந்தால் கிறிஸ்துவின் நற்செய்தி ரோம போரசு முழுவதும் சென்றிருக்காது; மேலும் புதிய ஏற்பாட்டு நூல்கள், கிறிஸ்த கோட்பாடுகள் இல்லாமல் இருந்திருக்கும் இப்படி ரோமானிய பேரரசு கிறிஸ்தவம் வளருவதற்கு பெரிய பங்களிப்பை கொடுத்தது.


2.கிரேக்க பங்களிப்பு:


 ரோமானியர்கள், கிரேக்கர்கள்மேல்

அரசியல் வெற்றியாளராக இருந்திருக்கலாம்.ஆனால் கலாச்சார ரீதியாக கிரேக்கர்கள் ஜெயித்தார்கள். ஆரம்ப நாட்களில் கிரேக்கம் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு கலாச்சார ரீதியாக, தத்துவ ரீதியாக மற்றும் அறிவுபூர்வமாக சிறந்த பங்களிப்பை கொடுத்தது.


கிரேக்க மொழி


உலகளாவிய நற்செய்தி (Universal Gospel) அறிவிப்பதற்கு உலகளாவிய மொழி அவசியம் பண்டைய காலத்தில் கிரேக்க மொழியானது உலக மொழியாக இருந்ததால் கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் எழுதினார்கள். அப்படியே யூதர்களும்  எபிரேய வேதாகமத்தை கிரேக்க மொழியில் மொழி பெயர்த்து அதை "செப்டுவஜின்ட்" என்று அழைந்தார்கள்.


கலாச்சார பங்களிப்பு:


 கிரேக்கர்கள் செழிப்பான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர். அவர்களின் ஓவியக்கலை, சிற்பக்கலை கட்டிடகலை, கைவினைப்பொருட்கள், மொழி, உணவு வகைகள், மதவழிபாட்டு முறைகள் போன்ற விஷயங்கள் கிறிஸ்தவ வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தன. கிரேக்க கலாச்சாரம் கிறிஸ்தவ போதனைகளுக்கு சாதகமாக இருந்ததினால், அநேகரை ஈர்த்து கிறிஸ்தவத்தை உலகலாவிய மதமாக மாற்றியது.


கிரேக்க தத்துவம்


பண்டையகாலத்தில் இருந்த பழைய மதங்களின் அடிப்படை நம்பிக்கைளை கிரேக்க தத்துவங்கள் அழித்து கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது. ஏனெனில் பண்டைய மதங்கள் பல தெய்வ வழிபாடுகளை கொண்டிருந்தது. பவுல் தன் எழுத்து மற்றும் செய்திகளில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் மற்றும் ஸ்தோயிக்கர்களின் தத்துவங்கங்களை உள்வாங்கி, கிறிஸ்துவின் நற்செய்தியை எழுதினார். இது கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிக பெரிய பங்களித்தது.


வேதாகமும் கிரேக்க தத்துவம்


கிரேக்க தத்துவஞானி Kerophane:

முதன்முதலில் பல கடவுள் கோட்பாட்டை அறிவு பூர்வமாக எதிர்த்ததினால் பல மதங்கள் அழிந்து போயின (எபே 4: 3).


கிறிஸ்து பிறந்த காலகட்டத்தில் உச்ச நிலையிலிருந்த கிரேக்க தத்துவம் பிளேட்டோ (Plato) மூலமாக ஸ்டோயிசம் மற்றும் எபிக்கூரியனிசம் போன்ற தத்துவத்திற்குள் சுருங்கிவிட்டது.

( 1 கொரி 1.18-31, அப் 17:18, 

கொலோ 2: 8),


Stoicism தத்துவம் கடவுளை தந்தையாகவும் மனிதர்களிடம் சகோதரத்துவத்தையும் ஒழுக்க நெறிமுறைகளையும் கற்பித்தது

 (1 கொரி 1:10, 1 பேது 2: 17), ஆனால் Epicureanism சிற்றின்பம் உலக ஆசாபாசம் மற்றும் உலக வாழ்க்கையை மையமாகக் கொண்டது (பிலி 3: 18,19).


தத்துவஞானி அரிஸ்டாட்டில் God is Prime Mover என்ற கூறி கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்றும் இந்த பிரபஞ்ச வாழ்க்கை நிலையானது அல்ல என்றும் கூறினார் (எபி 13:3)


சாக்ரடீஸ் மற்றும் பிளேட்டோ இருவரும் இந்த உலகம் தற்காலிகமானது என்றும் உண்மையான உலகத்தின் நிழல் என்று கற்பித்தனர் (2 கொரி 4:18),


ஆத்துமா அழியாதது என்றும் உயிர்த்தெழுதல் உண்டு என்று போதித்த பாரம்பரிய கிரேக்க தத்துவங்கள், கிறிஸ்தவ வளர்ச்சிக்கு உதவியது

 ( Cor 15:51),


வானம் பூமி மற்றும் திரித்துவம் போன்ற போதனைகளுக்ககு பிளேட்டோவின் தத்துவங்களே காரணமாகும்

 (11 கொரி 13:14).


கிறிஸ்தவம் Plato மற்றும் Aristotle ஆகியோரின் தத்துவங்களை உள்வாங்கி, கடவுள் சர்வ வல்லமையுள்ளவர் எல்லாம் அறிந்தவர் மற்றும் எங்கும் இருப்பவர் என்ற இறையியல் கருத்தை நிலைநாட்டியது (யோ21:17. 1 யோ 3: 18-20, மத் 28: 19-20).


கிரேக்க நந்துவ ஞானி தாலமி (Poleny), பிரபஞ்சத்தின் மையமே பூமி தான் என்று கூறியதை திருச்சபை ஏற்றுக்கொண்டது (லூக்4:40), இவையாவும் ஆரம்பகால கிறிஸ்தவ சிந்தனையை வடிவமைந்தது.


3.யூதர்களின் பங்களிப்பு:


 உலகத்தையே கலக்க இருந்த கிறிஸ்தவத்திற்கு யூதமதம் உறுதியான அடித்தளம் அமைத்து கொடுத்தது. எருசலேம் ஆலயமும் யூத பாரம்பரியமும் கிறிஸ்தவ மத வளர்ச்சிக்காக உறுதுணையாக இருந்தது.

 (யோவா 4:22).

 இயேசுவானவர் யூதராக, யூத கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நன்கு அறிந்திருந்தார்.


ஒரே கடவுள் கோட்பாடு


 பிற மதங்களின் பல தெய்வ கோட்பாடுகளுக்கு எதிராக யூத மதம் ஒரே கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தியதை கிறிஸ்தவமும் பின்பற்றியது (மற்; 12:29),

 பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த  யூதர்கள் பின்பு விக்கிரகாராதனையில் இறங்கவில்லை ஆகவே ஒரே கடவுள் கோட்பாடை யூதர்களின் ஆலயங்கள் மூலம் போதிக்கப்பட்டு கொண்டிருந்தது. மனித அறிவின் தத்துவங்கள் மூலம் கடவுளை கண்டுபிடிக்க விரும்பிய கிரேக்கர்களைப்போல யூத மக்கள்  கடவுளை கண்டுபிடிக்க முனைப்பை காட்டாமல், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கருதி, ஒரே கடவுளை மாத்திரமே ஆராதனை செய்தார்கள்.


மேசியா பற்றிய நம்பிக்கை


யூதர்கள்தான் இவ்வுலகில் மேசியா வருவார் என்ற நம்பிக்கையை ரோமானிய உலகில் பிரபலபடுத்தி, மேசியா பூமியில் நீதியாய் ஆளுகை செய்வார் என்று நம்பி, மேசியாவின் வருகைக்கு காத்திருந்தார்கள். இல் உலகில் பாலனாக பிறந்த இயேசுவை காண வந்த சாஸ்திரிகள், நிச்சயமாகவே மேசியாவைப்பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும் (மத் 2: 1-8), கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுகூட இயேசுவின் சீடர்கள் மேரியாவை தேடிக்கொண்டிருந்தார்கள் (அப் 1: 6). இவை கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு யூத மத்தின் பங்களிப்பாகும்.


நீதி நெறி முறைகள்


 யூத மதம் உலகிற்கு பத்து கட்டளைகள் மூலம் உருவாக்கப்பட்ட 613 கோட்பாடுகளை தூய்மையான நெறிமுறைகளய்  இந்த உலகிற்கு வழங்கியுள்ளது. ரோமானிய மற்றும் கிரேக்க மதங்கள் பாவம் என்பது வெளிப்புறம் சம்பந்தப்பட்டது என்று போதித்தது. ஆனால் பாவம் இருதயம் (சிந்தனை) சம்பந்தப்பட்டது என்று யூதமதம் கூறியது (மத் 15:19), 

ஆயினும் யூத மதத்தில் பாவத்திலிருந்து விடுதலைபெற கூறப்பட்ட மீட்பின் கோட்பாடுகள் (பலி செலுத்துதல் சிக்கலை சந்தித்தது. ஆனால் இயேசுகிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் உலகில் அனைத்து மனிதர்களின் பாவங்களையும் நீக்கி இரட்சிக்கும் என்று கிறிஸ்தவர்கள் போதித்தார்கள் (1 யோவா 1:17), இந்த 613 சட்ட திட்டங்களே உலக சட்டங்களாயிற்று.


யூதா வேதாகமும் கோட்பாடுகளும்


 யூத மக்களின் வேதாகமம் யூத பாரம்பரியம் ஆகியவை ஆதி கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களித்தது. ஆதி திருச்சபையில் முதல் 30 ஆண்டுகள் கிறிஸ்தவ நற்செய்தியாளர்கள் பழைய ஏற்பாட்டில் கர்த்தர் என்று வருகிற இடத்தில் மேசியாவாகிய இயேசு என்று போதித்ததினால், பலர்  யூத மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறினார்கள் கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் பெரும்பாலும் யூத கோட்பாடுகளில் இருந்தே எடுக்கப்பட்டது ஆகும். 


வரலாற்றின் தத்துவம் 


கடவுள் உலகத்தை படைத்தார் என்பதினால் படைப்பின் வரலாற்றுக்கு அர்த்தம் இருப்பதாக யூதமத தத்துவம் வலியுறுத்துகின்றது. ஆகவே படைப்பின் மூலம் உலகம் ஆரம்பமாகி இறுதியாக அழிவில் முடியும் என்ற கோட்பாட்டை ஆதரித்தார்கள். இதில் உலகத்தை படைத்த சர்வவல்ல கடவுள், உலக இறுதியில் மனிதர்களின் செயல் பாடுகளுக்கு நியாயம் வழங்குவார் என்ற கோட்பாட்டை கிறிஸ்தவம் ஏற்றுக்கொண்டது (எபி 9.27, 2 பேது 3:10, வெளி 22, 11.12), இவையாவும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பை கொடுத்தது.


ஜெப ஆலயம் 


ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு யூதர்களின் ஜெப ஆலயம்தான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு உதவியாக இருந்தது. இதன் மூலமாக யூதர்களும் மற்றும் பிற இனத்தவரும் வாழ்க்கைக்கான உயர்ந்த அணுகுமுறையை அறிந்திருந்தனர் (கலா 3: 23-25), 

தொடரும்……...




Post a Comment

0 Comments