தாவீது. அறிந்து கொள்வோம் பகுதி - 60

 அறிந்து கொள்வோம்

பகுதி - 60



தாவீது. ( அன்புக்குரியவர்,  நேசர்)*


*கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்ற மனிதன் என்று கூறப்பட்ட  ஒரே மனிதர் தாவீது. இதை விட வேறு என்ன வேண்டும்?*.



*நற்பண்புகள், வெற்றிகள்*


*1. சிறுவயதிலிருந்தே தேவனை நேசித்தல்*


*2. தனது உயிரை பொருட்படுத்தாது தன் பொறுப்பிலிருந்த ஆடுகள் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக செயல்படுதல்*


*3.இசையில் நாட்டமும், திறமையும்*.


*4.தேவனை பற்றிய வைராக்கியமும் விசுவாசத்தால் வந்த தைரியம் கொண்டு போரிடுதல்*


*5.கடமை தவறாமை*


*6 தன்னை கொலை செய்ய முனைகிறவர் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவரென்பதால் அவரைக் கொலை செய்யாமல் காப்பாற்றும் அளவிற்கு தேவன் மீது உயர்ந்த மரியாதை*.


*7.எதிரியை பழிவாங்கும் எண்ணமில்லாதபோதும் நீதியை நிலைநாட்டுவதற்காக மரணதண்டனை அளித்தல்*.


*8.மற்றவர்களின் தியாகமான செயல்களுக்கு மிகுந்த மதிப்பளித்தல்*.


*9.நட்பிற்கு இரக்கனமாக தன் பகைவனின் பேரனுக்கு உயர்வளித்தல்*.


*10. தமது பாவத்தை யாரேனும் உணர்த்தினால் தாழ்மையுடன் ஏற்றுக் கொண்டு பாவத்திற்க்காக மனந்வருந்தி, மனந்திரும்பி பாவமன்னிப்புக்காக ஊக்கமாக ஜெபித்தல், இது தேவனுடைய இதயத்துக்கு ஏற்ற செயலாகும்*.


*11.தேவனை மகிமைபடுத்துவதற்காக தேவனுக்கு ஆலயம் கட்டவேண்டுமென்ற வாஞ்சை*


*12. மாபெரும் அரசானாக இருந்த போதிலும் தேவனை தேடுவதற்கு நேரம் ஒதுக்கி அனுதினமும் பல முறை தேவனைத் துதித்தல்*.


*13.அரசாக இருந்த போதிலும் குகையிலிருந்த போதிலும்  உயிர்தப்புவதற்கென ஒடும்போதும்  எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனைத் தேடியவர்.கவிதை எழுதியவர்*.


*14. ஆவியானவரால் ஏவப்பட்டு கவிதைகள் எழுதினார்*.


*15.தாவீதின் குமாரன் என்று இயேசு அழைக்கப்பட்டது தாவிதுக்கு கிடைத்த கிருபை*.



*பெலவினங்கள், தோல்விகள்*


*1. ஒரு முறை தனது கண்களின் இச்சையை பின்பற்றியதால் விபசாரம், கபடு, கொலை, போன்ற குற்றங்களுக்குள்ளானார்*.


*2.தேவன் சொல்லாமல் தானாக இஸ்ரவேலரின் மக்கள் தொகையை கணக்கெடுக்க உத்தரவிட்டார். இதன் முலம் தேவன் மீது சாந்திராமல் தனது படைபலத்தில் சார்ந்திருக்க கூடிய அபாயம் உண்டனது.


*3. தனது குடும்பத்தினரை கர்த்தரிடம் சரியாக வழிநடத்த தவறிவிட்டார்*


*பிற குறிப்புகள்*


இடம் -  இஸ்ரவேல் நாடு


சொந்த ஊரு -  பெத்லகேம்


தந்தை - ஈசாய்.


தொழில்கள்:         மேய்ப்பர்,இசைகலைஞர்,


குடும்பம் -  ஏழு சகோதரர், பல   மனைவிகள்,பல குழந்தைகள் ,பல குழந்தைகள்..






Post a Comment

0 Comments