3-ம் சங்கீதம் சங்கீத விளக்கம்

 சங்கீத விளக்கம்


3-ம் சங்கீதம்


தலைப்பு:-

“இரட்சிப்பு கர்த்தருடையது”


குறிப்பு:

இந்த சங்கீதத்தை காலை சங்கீதம் என்றும் அழைக்கலாம்.


வசன விளக்கம்:-


(தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பாடின சங்கீதம்.)


1. கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.

2. தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)

3. ஆனாலும்கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், 

என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.


இந்த பகுதியில் தன் மகனும் தன் மக்களில் அநேகரும் தனக்கு எதிராக சதி செய்ததால் உயிர்தப்ப ஓடும் பொழுதும் கர்த்தர் அவனுக்கு எதிராக இருக்கிறார் என்று அநேகர் கருதும் போதும் தாவீது கர்த்தரை முற்றிலும் நம்பினார். யாவும் தமக்கு எதிராக இருந்தாலும் கர்த்தர் நம்மோடு நம் அருகில் இருக்கிறார் என்பதை மறவாதீர். அவரை குறை கூறாமல் அவர் மீது சார்ந்து தனது படை பலத்தை நம்பாமல் கர்த்தரை சார்ந்துக்கொண்ட தாவீதை பின்பற்றுவோம்.


சேலா


"சேலா" என்பது சங்கீதங்களில் 71 முறையும் ஆபகூகில் 3 முறையும் வருகிறது. இது இசை குறியீடு என கருதபடுகிறது. இதன் பொருள் "திரும்ப பாடு"  "குரலை உயர்த்தி பாடு" என்றும் ஆமென், அல்லேலூயா போன்ற ஏதேனும் ஒன்று என்றும் கருதப்படுகிறது. திரும்பவும் பாடு என்பதை அநே பன்டிதர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை

இப்படி கூறுவது தேவன் தன்னை கைவிட்டுவிட்டார் என கருத தூண்டும் வார்த்தை ஆகும். இதன் மூலம் நம்பிக்கை இழக்க செய்வதே எதிரியின் நோக்கம். தேவன் நம்மை கைவிடுவதில்லை. நமக்கு பதிலாக கிறிஸ்துவை சிலுவையில் இமைபொழுது கைவிட்ட தேவன்.

 (ஏசா 54:7-8; மத் 27:46) நம்மை கைவிடமாட்டார் (எபி 13:5).


4. நான்கர்த்தரைநோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)


கர்த்தருடைய பரிசுத்த பர்வதம் என்பது எருசலேமிலுள்ள மோரியா மலை ஆகும். இதின் மேல் தான் சாலொமோன் தேவாலயம் கட்டினான். கர்த்தர் எங்கும் இருக்கிறார் எங்கிருந்து ஜெபித்தாலும் கேட்கிறார் என்றும் தாவீது அறிந்திருந்தான்.


5. நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்;கர்த்தர்என்னைத் தாங்குகிறார்.

6. எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.


தாவீதை போல கர்த்தரை நம்பி நமக்கு எதிராக வருகிற எதற்க்கும் அஞ்சாமல் இருக்கும் படி இந்த வசனங்கள் கூறுகிறது.மிகவும் ஆபத்தான சூழலில் தாவீது கர்த்தரை நம்பியதால் நன்கு உறங்கினான். காலையில் இந்த பாடலை பாடினான். தூக்கம் என்பது மரணத்தின் நிழல் போன்றது. தூங்கும் போது நமது சுவாசம், இரத்த ஓட்டம், மூளையின் செயல்கள் எல்லாவற்றையும் கர்த்தர் நடத்துகிறார். அச்சமயத்தில் வரும் ஆபத்துகள் நாம் அறியமுடியாதவைகள். அவற்றினின்று நம்மை காப்பவர் கர்த்தர் ஒருவரே.


 கடைசியாக வச.8ன் படி இரட்சிப்பு கர்த்தருடையது. எந்த சூழ்நிலையிலும் இது உண்மை.


 



Post a Comment

0 Comments