பாடுகளின் வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு - 2

 


பாடுகளின் வாரம் 


ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு - 2


எருசலேம் நகரம் 

(லூக் 19 : 41-48)



லூக் 19:41. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,



லூக் 19:42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.



லூக் 19:43. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,



லூக் 19:44. உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்-ன்மேல் ஒரு கல்-ராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.

இயேசு கண்ணீர்விட்டழுது

Also read :கேட்கப்பட்டதும்! கொடுக்கப்பட்டதும்!(சிலுவை தியானம்) 1 கொரிந்தியர் 1:17-18

அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,  (லூக் 19:41)  



பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்திருக்கும்  தேவகுமாரன் இப்போது வெளிப்படையாக, எல்லா ஜனங்களுக்கும் முன்பாக எருசலேம் நகரத்திற்குள் பிரவேசிக்கிறார். எருசலேம் நகரத்தார் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தாலும் அவர் இந்த நகரத்தின்மீது அன்பாகவும் கரிசனையாகவும் இருக்கிறார். 



இயேசுகிறிஸ்து எருசலேம் நகரத்திற்கு சமீபமாய் வந்தபோது அந்த நகரத்தைப் பார்த்து  அதற்காக கண்ணீர் விட்டு அழுகிறார். அந்த நகரத்திற்கு வரப்போகும் அழிவை நினைத்து இயேசு கண்ணீர் விடுகிறார். இந்த சம்பவம் அவர் ஒலிவ மலையின் அடிவாரத்திற்கு சமீபமாய் வருகையில் நடைபெற்றிருக்கலாம். இந்த அடிவாரத்திலிருந்து எருசலேம் நகரத்தை  நன்றாக பார்க்க முடியும். இங்கிருந்து பார்க்கும்போது எருசலேம் நகரம் முழுவதும் தெரியும். இயேசுகிறிஸ்து ஒலிவ மலையின் அடிவாரத்திலிருந்து எருசலேம் நகரத்தை தம்முடைய கண்களால் பார்க்கும்போது, அவருடைய இருதயம் உடைகிறது. கண்களில் கண்ணீர் வருகிறது. 



இயேசுகிறிஸ்து மென்மையான இருதயமும்  சுபாவமும் உடையவர். அவர் நகைத்தார் என்று எந்த வசனத்திலும் வாசிக்க முடியாது. ஆனால்  இயேசு பல சமயங்களில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இயேசுகிறிஸ்துவைப் பற்றிய எல்லா காரியங்களும் அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு சந்தோஷமானதாக இருக்கிறபோதிலும், அவரோ கண்ணீர் விட்டு அழுகிறார். திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் இயேசுகிறிஸ்துவை ஸ்தோத்திரிக்கிறார்கள். புகழுகிறார்கள். மகிமைப்படுத்துகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ கண்ணீர் விட்டு  அழுகிறார். மனுஷருடைய வார்த்தையினால் இயேசுகிறிஸ்துவுக்கு ஒருபோதும் மகிமை உண்டாகப்போவதில்லை. அவர் ஏற்கெனவே மகிமையானவர். அவருடைய மகிமையைக் காண்கிறவர்கள் அவரை மகிமைப்படுத்துகிறார்கள்.  



இயேசுகிறிஸ்து எருசலேம் நகரத்தைப்பார்த்து அதற்காக கண்ணீர் விட்டு அழுகிறார். இந்த உலகத்தில் பல பட்டணங்களுக்காக நாம் கண்ணீர் விட்டு அழவேண்டும். ஆயினும் எல்லா பட்டணங்களையும் விட எருசலேம் பட்டணத்திற்காக அதிகமாக கண்ணீர் விட்டு அழவேண்டியது அவசியம். எருசலேம் நகரத்தைப்பார்த்து இயேசுகிறிஸ்து கண்ணீர் விட்டு அழுததற்கு ஒரு காரணமுள்ளது. இயேசுகிறிஸ்துவே தம்முடைய கண்ணீருக்கான காரணத்தை நமக்கு இங்கு தெளிவுபடுத்துகிறார். 



இயேசு கிறிஸ்து அழுத இடம் பெத்தானியாவிலிருந்து எருசலேமிற்குச் செல்லும் பாதையாகும். ஒலிவ மலைக்கு வந்தபோது, எருசலேமின் காட்சி நன்றாகத் தெரியும். கீதரோன் பள்ளத்தாக்கிலிருந்து பார்க்கும்போது மோரியா மலையும், அதன் தேவாலயமும் நன்றாகத் தெரியும். சீயோன் மலை மோரியா மலையைவிட உயர்ந்தது. அங்கு ஏரோதின் அரண்மனை இருந்தது. இந்த இடத்திலிருந்து தான் இயேசு கிறிஸ்து எருசலேம் நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுகிறார்.

நலமாயிருக்கும்

உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்-ன்மேல் ஒரு கல்-ராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்  (லூக் 19:42-44). 

Also read :பாடுகளின் வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு - 2



எருசலேம் நகரம் தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களின் நாட்களை தன்னுடைய சமாதானத்திற்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுதோ இந்த நகரத்தின் சமாதானத்திற்கு ஏற்றவைகள் அதன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது. எருசலேம் நகரம் தன்னுடைய சமாதானத்திற்கு கிடைத்த  வாய்ப்புக்களை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நகரமோ அதை அறியாமல் போயிற்று. 



கனிகொடுக்காத அத்திமரம் வெட்டிப்போடப்படும். கனிகொடுப்பதற்காக அதை சுற்றிலும் கொத்தி எருபோடப்படுகிறது. கனிகொடுப்பதற்கு மேலும் ஒரு வருஷகாலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த அவகாச காலத்தை பயன்படுத்தி அத்திமரம் கனிகொடுக்க வேண்டும். இல்லையேல் இதற்கு  அழிவு நிச்சயம்,  (லூக் 13:9).


எருசலேம் நகரம் மனந்திருந்தி கனிகொடுப்பதற்கு பல வாய்ப்புக்கள் இதுவரையிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தன்னுடைய சமாதானத்திற்கு ஏற்றவைகளை அந்த நகரம் அறிந்திருக்கவில்லை.  அதை அறிந்திருந்தால் நலமாக இருக்கும். ஆனால் இப்பொழுதோ இந்த நகரத்திற்கு அழிவு நெருங்கியிருக்கிறது. 



நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சில காரியங்கள் நம்முடைய சமாதானத்திற்கு  ஏற்றவைகளாக இருக்கும். அந்தக் காரியங்களை  நாம் அறிந்திருக்க வேண்டும். அவற்றை புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சமாதானத்திற்கு ஏற்ற காரியங்கள் இப்போதுள்ள காலத்திற்கும், இனிமேல் வரப்போகிற காலத்திற்கும் நமக்குப் பிரயோஜனமுள்ளதாக இருக்கும். 



நம்முடைய சமாதானத்திற்கு ஏற்ற காரியங்கள் நம்முடைய ஜீவியத்திற்கு வரும்போது அவற்றை கண்டுபிடித்து, அதற்கு ஏற்ற பிரகாரம் நடந்துகொள்ளவேண்டும். கிருபையின் காலத்தை நம்முடைய சமாதானத்திற்கு ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தேவனுடைய வார்த்தை வல்லமையோடு நமக்கு பிரசங்கம்பண்ணப்படும்போது, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேவசமாதானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 


தேவனுடைய வார்த்தை எல்லோருக்கும் பிரசங்கம் பண்ணப்பட்டாலும், ஒரு சிலர் மாத்திரமே வசனத்தை தங்களுடைய இருதயங்களில் ஏற்றுக்கொள்கிறார்கள். ஏராளமானோர் கர்த்தருடைய வார்த்தையை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் புத்தி தெளியும்போது, தங்கள் கண்களை திறந்து பார்க்கிறார்கள். தங்கள் செவிகளையும் திறந்து கேட்கிறார்கள். ஆனால் அப்போது தேவனுடைய கிருபையின் வார்த்தை இவர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை. காலம் கடந்துவிட்டது. தங்களை சந்திக்கும் காலத்தை இவர்கள் அறியாமல் போனார்கள்.   கிருபையின் காலம் முடிந்து நியாயத்தீர்ப்பின் காலம் வந்துவிடுகிறது. கிருபையின் காலத்தை  அசட்டை செய்தவர்கள், நியாயத்தீர்ப்பு நாளின்போது வருத்தப்படுவார்கள். 



தேவனுடைய கிருபையை அசட்டை செய்து  ஏராளமான ஜனங்கள் போக்கடித்துவிட்டார்கள்.  தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை  தங்களுடைய சமாதானத்திற்கு ஏதுவாக பயன்படுத்த தவறிவிட்டார்கள். இவர்களுக்கு சமாதானத்தின் காரியங்கள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும் அசட்டையாக இருந்து அவற்றை அங்கீகரியாமல் போனார்கள். தங்களுடைய கண்களை சமாதானத்திற்கு விரோதமாக மூடிக்கொண்டார்கள். தங்களுடைய செவிகளை சமாதான வார்த்தைகளுக்கு விரோதமாக அடைத்துக்கொண்டார்கள். இது இரட்சணிய காலம் என்பதையும், இதுவே அனுக்கிரக காலம்  என்பதையும் புரிந்துகொள்ள தவறிவிட்டார்கள். தங்களுடைய கவனக்குறைவினால் இவர்கள் அழிவை நோக்கிப் போய்கொண்டிருக்கிறார்கள்.   இவர்களுக்கு கண்கள் இருந்தும், சமாதானத்திற்கு ஏற்றவைகளை காணக்கூடாத  குருடர்களாகிவிட்டார்கள். அதுபோலவே இவர்களுக்கு செவிகள் இருந்தும், சமாதானத்திற்கு ஏற்றவைகளை கேட்கக்கூடாத  செவிடர்களாகிவிட்டார்கள்.


இது கிருபையின் காலம்.  தேவனுடைய கிருபையினால் சுவிசேஷம் எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறது. தேவகிருபையை அசட்டை பண்ணும்போது தேவன் அவர்களைப் பார்த்து துக்கப்படுகிறார்.   நம்முடைய வாழ்க்கையில் தேவன் நம்மைப் பார்த்து துக்கப்படும் விதமாக பொறுப்பில்லாமல், அசட்டையாக, கண்கள் இருந்தும் குருடராக, செவிகள் இருந்தும் செவிடராக ஜீவிக்கக் கூடாது. காணாமல்போன ஆத்துமாக்களைப் பார்த்து இயேசுகிறிஸ்து கண்ணீர் விட்டு அழுகிறார். தேவனை விட்டு பிரிந்து போய் இருக்கிறவர்கள் அழிந்து போய்விடக்கூடாது என்பதில் இயேசுகிறிஸ்து வைராக்கியமுள்ளவராக இருக்கிறார்.  ஒருவரும் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல. 



சமாதானத்திற்கு ஏற்றவைகளை எருசலேம் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது இந்த நகரத்திற்கு அழிவு நெருங்கியிருக்கிறது.  கிருபையின் காலத்தில்  இந்த நகரத்தின் கண்களுக்கு சமாதானம் மறைவாக இருந்தது.   ஆனால் இப்போதோ இந்த நகரத்தின் கண்களுக்கு சமாதானம் மறைக்கப்பட்டிருக்கிறது. 


அப்போஸ்தலர்கள் மூலமாகவும், கர்த்தருடைய ஏராளமான ஊழியக்காரர்கள் மூலமாகவும் ஜனங்களுக்கு  இந்த கிருபையின் காலத்தில் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான ஜனங்கள் தேவனுடைய இரட்சிப்பின் கிருபையினால் தங்கள் ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதேவேளையில் இன்னும் ஏராளமான ஜனங்கள் தங்கள் இருதயத்தை கடினப்படுத்தி, இயேசுகிறிஸ்துவின்  சுவிசேஷத்திற்கு செவிகொடுக்காமல், தங்கள் கண்களையும் செவிகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய இரட்சிப்பின் கிருபையை அசட்டை செய்து புறக்கணிக்கும் இவர்கள் அவிசுவாசத்தில் மூழ்கியிருக்கிறார்கள். தங்கள் இருதய கடினத்திற்கும் ஆவிக்குரிய குருட்டுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்து தேவகிருபையை போக்கடித்துவிடுகிறார்கள். 


தேவன் கொடுக்கும்

 இரட்சிப்பை நாம் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் நியாயத்தீர்ப்பு நாளின்போது நமக்கு அழிவு நியமிக்கப்படும். இதுபோன்ற சம்பவமே இப்போது  எருசலேம் நகரத்திற்கு வந்திருக்கிறது.   தேவசமாதானத்தைப் பெற்றுக்கொள்ள எருசலேம் நகரத்திற்கு இதுவரையிலும் தேவன் பல வாய்ப்புக்களை கொடுத்தார். ஆனால் அவர்களோ அந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது எருசலேம் நகரத்தின்மீது தேவனுடைய கோபமும் நியாயத்தீர்ப்பும் வந்திருக்கிறது. 


ரோமப்பேரரசார் எருசலேம் நகரத்தை முற்றிக்கை போடப்போகிறார்கள். இந்த நகரத்தைச் சுற்றிலும் மதில்போட்டு இவர்களை வளைந்துகொள்ளப் போகிறார்கள். எப்பக்கத்திலும் எருசலேம் நகரத்தை நெருக்கி, அதிலுள்ள ஜனங்களையும், அவர்களுடைய பிள்ளைகளையும் தரையாக்கிப் போடப்போகிறார்கள். இந்த நகரத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இதை அழித்துப்போடப்போகிறார்கள். நகரம் அழிவதோடு நகரத்திலுள்ளவர்களும் சேர்ந்து அழியப்போகிறார்கள். 



இந்த அழிவுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. இவர்கள் தங்களை ""சந்திக்கும் காலத்தை'' அறியாமல்போனார்கள்.  தேவன் நம்மை தமது கிருபையினால் சந்திக்கும்போது அதை அறிந்துகொள்ள வேண்டும். கிருபை நம்மை சந்திக்கும் காலத்தை  அறிந்துகொள்ளவில்லையென்றால், அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையென்றால், நாம் அறியாத நாளில் நமக்கு அழிவு வரும்.


வெளிச்சத்தைவிட அவர்கள் இருளை விரும்புகிறார்கள். ஆகையினால் சத்தியமும், தீர்க்கதரிசனங்களும் அவர்களுக்கு மறைவாயிருக்கிறது  

(யோவான் 3:16-20).


""உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்குவார்கள்''  என்று இயேசுகிறிஸ்து எருசலேமைப்பற்றிச் சொல்லி கண்ணீர்விட்டு அழுகிறார்.   கி.பி. 70ஆம் ஆண்டில் ரோமர்கள் எருசலேம் நகரத்தாருக்கு இந்தக் காரியங்களைச் செய்தார்கள்.  



 தீத்து என்பவன் ரோமப்பேரரசின் படைத்தளபதி. இவன் எருசலேமைத் தாக்குவது மிகவும் கடினம் என்று நினைத்தான். ஏனெனில் அது இயற்கையான மலையின் உயரத்தில் அமைந்திருந்தது. தீத்து எருசலேமைச் சுற்றிலும் மதில்போட்டான். அந்தப் பட்டணத்திற்குள் எந்தப் பொருட்களும் செல்லாதவாறு தடை பண்ணினான். இதனால் செழிப்போடு இருந்த எருசலேம் பட்டணம், பஞ்சத்திற்குத் தள்ளப்பட்டது. எருசலேம் பட்டணம் தரைமட்டமாக ஆக்கப்பட்டது.  


 தானி 9:24-27 ஆகிய வசனங்களில்-  69 ஆவது வாரத்தின் முடிவு என்பது எருசலேமையும், தேவாலயத்தையும் திரும்பக் கட்டுவதற்குப் பாபிலோனிய சிறையிருப்பு முடிந்து 483 வருஷங்களைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறார். (தானி 9:25)




Post a Comment

0 Comments