யோசுவா || பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் ||

 OT Book Summary

பழைய ஏற்பாட்டின்

புத்தக சுருக்கம்


யோசுவா


"வாக்குத்தத்தம் நிறைவேறுதல்"


பெயர் காரணம்:


இந்த புத்தகத்தில் பிரதானமாக இடம்பெறும் நபரின் பெயரே இந்த புத்தகத்தினதும் பெயரானது.

"யோசுவா" என்னும் பெயருக்கு "கர்த்தர் இரட்சிக்கிறவர்” என்று பொருள்.இந்தப் பெயர் கர்த்தரின் கட்டளையின்படியே, இஸ்ரவேலரை நடத்திச் சென்று வாக்களிக்கப்பட்ட நிலத்தை வெற்றிகரமாக யுத்தஞ் செய்து சுதந்தரித்துக் கொடுத்த ஒரு மனிதனுக்கு மிகப் பொருத்தமானது.


ஆசிரியர் மற்றும் சில தகவல்கள்


இந்தப் புத்தகத்தின் அதிகமான பகுதிகளை யோசுவாவோ அல்லது யோசுவாவின் வழிகாட்டுதலின் கீழ் இன்னொருவரோ இதை எழுதியிருக்கலாம்.

யோசுவா எழுதியதைக் குறித்து இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டாலும் (8:32, 24:26), இந்தப் புத்தகம் யோசுவாவினால் எழுதப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. அடிக்கடி பயன்படுத்தபட்டுள்ள "இந்நாள்வரைக்கும்" என்ற சொற்தொடரை (4:9,5:9,6:25) கவனத்தில் கொண்டு பார்க்கும்போது நடைபெற்ற நிகழ்வுகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதற்கும், பின்பு முழுமையாக எழுதி முடிக்கப்பட்டதற்கும் இடையில் ஒரு கால இடைவெளி இருப்பதை காணமுடிகிறது. யோசுவாவின் மரணத்திற்கு பின்பு பிரதான ஆசாரியனான எலேயாசரோ அல்லது பினேகாசோ தேசத்தை கைப்பற்றிய பின்னர் நடந்தவற்றை சேர்த்து எழுதியிருக்கலாம். 

(15:13-19, 19:47, 24:29-33)


எழுதப்பட்ட காலம்: கிமு 1400ல் எழுத ஆரம்பிக்கபட்டது

அதிகாரங்கள் 24

வசனங்கள் : 658


வரலாற்றில் இந்த புத்தகத்தின் இடம்


இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மோசேயின் மரணம் நிகழ்ந்த சில நாட்களில் ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகால வரலாற்றை சொல்லுகிறது (யோசுவா 1:1)

யோசுவாவின் புத்தகம் முழுவதும் கானானுக்குள் பிரவேசித்தல், அதை கைப்பற்றுதல்,அதில் குடியேறுதல் குறித்தே சொல்லுகிறது.


  • தேசத்தை கைப்பற்றுவதற்கான வாக்குத்தத்தை குறித்த அறிவிப்போடு இது ஆரம்பமாகிறது (1:2:3).


  • தேசத்தை கைப்பற்றுவதற்கான வாக்குத்தத்தம் நிறைவேறியதை குறித்த அறிவிப்போடு இது முடிவடைகிறது (23:24).


  • தேசத்தை கைப்பற்றும் நிகழ்ச்சி 7 ஆண்டுகள் நடந்தன. 


இஸ்ரவேலர் 30க்கும்

மேற்பட்ட வெவ்வெறு இராஜாக்களுடன்  யுத்தம் செய்தார்கள்.

இதிலே 3 யுத்த முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.


1வது - கானானின் மத்திய பகுதியில் (யோசுவா அதி 6-8).

 

2வது - கானானின் தெற்குப் பகுதியில் (யோசுவா அதி 9-10).


3வது - சானானின் வடக்குப் பகுதியில் (யோசுவா அதி 11-12).


யோசுவா புத்தகத்தின் முக்கிய நிகழ்வுகள்


1.அதி 1-5 யோசுவா


யோசுவா மோசேக்கு  பின்பு அடுத்த தலைவனாகி இஸ்ரவேல் ஜனங்களை நடத்திச்செல்லுதல்


2.அதி 6-12 கானானியர்களோடான யுத்தம்


  • எரிகோ - கர்த்தர் யாவற்றையும் செய்வார்.

  • ஆயி - ஆகானின் ஆகாத காரியத்தால் தோல்வி.

  • கிபியோனியர்கள் - யோசுவா கர்த்தரிடம் கேட்காமல் சமாதான உடன்படிக்கை செய்தல்.

  • கானானின் தெற்கு, வடக்கு இராஜாக்களோடு செய்த 31 யுத்தங்கள்.


அதி 13-22 யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களுக்கு பங்கிடப்பட்ட காணியாட்சியின் விபரம்.


அதி 23-24 யோசுவாவின் இறுதி வார்த்தைகள்.


மோசேயின் பிரியாவிடை செய்திக்கு ஒத்தது- தேவனுடைய உடன்படிக்கைக்கு உண்மையாயிருந்து அவரது கட்டளைகளை கைக்கொண்டு நடக்க அழைப்பு கீழ்படியாமை குறித்த எச்சரிப்பு

 “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்”


அடுத்த தலைமுறைத் தலைவனான யோசுவா


  • எப்பிராபீம் கோத்திரத்தை சேர்ந்தவன்.


  • 85வது வயதில் இஸ்ரவேலின் தலைவனானவன்.


  • இஸ்ரவேல் ஜனத்தை 25 ஆண்டுகள் வழிநடத்தியவன்.


  •  110 வயதில் மரித்தான்.


தேவன் தமது வாக்குத்தத்தம்களை நிறைவேற்ற உண்மையுன்னவர். · தேவன் நமது நோக்கத்தை நிறைவேற்ற உண்மையுள்ளவர்களை தேடுகிறார்

ஐந்நூலின் காரியங்கள் முடிவுற்ற பின்னர் உடனடியாக யோசுவாவின் புத்தகம் வருகிறது.முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் முதலில் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்டது. 

(ஆதி 12:1-4) பின்பு ஆபிரகாமின் குமாரனான ஈசாக்குக்கு கொடுக்கப்பட்டது (ஆதி 12:24)

அதன் பின்பு ஆயிரகாமின் பேரன் யாக்கோபுவுக்கு கொடுக்கப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு முன்பாக தமது ஜனத்தை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பிற்கு வழிகாட்டி அழைத்து வர தேவன் மோசேயை தெரிந்துகொண்டார்.

 (யாத் 3:6-8, 5:24) இப்பொழுது அநேக ஆண்டுகள் வனாந்தர அலைதலின் பின் அந்த நிலப்பரப்பிற்குள் தமது ஜனத்தை அழைத்துச் செல்லவும், அதை கையகப்படுத்தவும். அதை தேவன் அவர்களுக்கு அளிக்கும் சுதந்திரவிநமாய் பகிர்தளிக்கவும் புதிய மோசேவாக யோசுவா தெரிந்துகொள்ளபடுகிறான்.


தலைமைத்துவத்திற்கான பாடங்கள்


1.தலைவர்கள் காலத்தோடு வளருகிறவர்கள்:


தலைவர்கள் தோன்றுகிறவர்கள் அல்ல.

அவர்கள் காலத்தால் உருவாக்கப்படுகிறவர்கள் 

யோசுவா எகிப்தில் அடிமையாக பிறந்தான்.வெற்றி வீரராக

இளமைக்காலத்தில் மோசேக்கு

உதவியாளனாக சேவகம் புரிந்தான்

மோசேயின் இறுதிக்காலத்தில் தேவன் அவனை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள், அழைத்துச் செல்லும் தலைவளாக்கினார். தலைவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும்

சிறிய பணிகளில் தங்களை நிரூபிக்கிறவர்கள்,சீனாய் தீபகற்பத்தில் அமலேக்கியர்களுடனான யுத்தத்தில் இஸ்ரவேலின் சேனைக்கு தலைமையேற்று வெற்றி கண்டான்.


2.தலைவர்கள் தலைவர்களை பின்பற்றுவார்கள்


தலைவர்கள் தங்களுக்கு முன்னிருந்த தலைவர்களோடு உறுதியான பிணைப்பை கட்டியெழுப்பிக்கொள்வார்கள்

மோசே கற்பலகைளில் எழுதப்பட்ட கட்டளைகளை பெற பரிசுத்த பர்வதத்திற்கு ஏறிச் சென்றபோது உடன் செல்ல யோசுவா மாத்திரமே அனுமதிக்கப்பட்டான் (யாத் 24:13-14) 

மோசேயால் நிறுவப்பட்ட தற்காலிக

கூடாரத்தைவிட்டு பிரியாமல் அதை காவல் காப்பவனாக நின்றவன் யோசுவா (யாத் 33:113).

  

மோசேக்கும் யோசுவாவுக்குமான ஒற்றுமைகள் 


  • கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வலியுறுத்தப்பட்டான்.

  • எரிகோ பட்டணத்தை வேவு பார்க்க அனுப்புதல் (மோசே செய்தது போல்) 

  • சிவந்த சமுத்திரம் பிரிந்ததைபோல் ஜோர்தான்

நதியை பிரித்தான்.


3.தலைவர்கள் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருப்பார்கள்


தலைவர்கள் பெரும்பாண்மையின் பக்கம் நிற்காமல் அவர்கள் தேவனின் பக்கமே நிற்பார்கள் இதற்கு முந்திய ஐந்து புத்தகங்களின் (தோரா) பல இடங்களிலும் இஸ்ரவேலர் தேவனுக்கும், மோசேக்கும் எதிராய் நின்றபோது இருவருக்கும்

விசுவாசமாய் நடந்துகொண்டவன் போசுவா இஸ்ரவேலர் பொன்கன்றுக்குட்டியை ஆராதிக்க திரும்பின வேளையில் அதில் பங்கெடுத்துகொள்ளாதவன் இந்த யோசுவா (யாத் 32:17-19).

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை முன்பாகவே சென்று பாத்துவர மோசேயினால் அனுப்பப்பட்ட பள்னிரண்டு வேவுகாரரில் யோசுவா ஒருவனாயிருந்தும் தேவன் தேசத்தை சுதந்தரிக்கச் செய்வார் என்று உறுதியாய் விசுவாசித்தவன்.

 (எண் 14:69)


4.தலைவர்களும் தவறக்கூடியவர்களே


தலைவர்களுக்குள்ளும் குறைபாடுகள் உண்டு யோசுவா அதி 9- நேரடியான, மறைமுகமான தாக்குதல் 

ஏத்தியர், எமோரியர் காளானியர்: பெர்சியர், ஏவியர், எபூசியர் ஆகிய இனக்குழுக்கள் யோசுவாயுடன் இஸ்ரவேலர்வுடன் யுத்தம்பண்ண வந்தார்கள் இது நேரடியான தாக்குதல் 

ஆனால் கிபியோனியர்கள் தொடுத்ததோ மறைமுகமான தாக்குதல்

அவர்கள் தங்களை ஸ்தானாதிகளைப் போல காண்பித்து, பழைய பைகளையும், பிளவும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து, பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தாங்கள் கால்களில் போட்டு, பழைய வாஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள அவர்களது அப்பங்கள் உளந்ததும் பூசனம் பூத்ததுமாயிருந்தது. 

“நாங்கள் தூரதேசந்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கை பன்னுங்கள் என்றார்கள்.

யோசுவாவும், இஸ்ரவேலரும் "கர்த்தருடைய வாக்கைக் கேலாமல் இந்த விஷயத்தில் செயற்பட்டார்கள்.


Taken from Pr.Thamas Raj Notes





Post a Comment

0 Comments