முறையான இறையியல் (Systematic Theology ) (Lesson 01 to 05)

 முறையான இறையியல் (Systematic Theology )


(Lesson 01 to 05)


இறையியல் போதனைகள்

 (The Doctrine of God)


அறிமுகம் 


இறையியலில் இறை போதனை மையப்புள்ளியாக காணப்படுகிறது ஒவ்வொரு மனிதனும் இறைவனை பற்றிய அறிவுடையவனாக இருக்கிறான். இறைவனை சார்ந்தும் இறைவனிடம் பொறுப்பு உடையவனாகவும் இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறான். இறைவனைக் குறித்து புரிந்து கொள்வதற்கும் நம் வாழ்வின் பிரச்சனைகள் கஷ்டங்கள் உதவுகின்றன. தேவனைப் புரிந்து கொள்ளும் போது தான் நம் வாழ்வின் தவறுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இறைவன் ஆகாய மண்டலத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் ஒருவர் அல்ல அவர் சிருஷ்டிகர் சர்வவல்லவர் தனித் தன்மை உடையவர் அன்புள்ளவர் கருணை உள்ளவர் என்பதை இந்த கல்வி நமக்கு விளக்குகிறது. அவர் எங்கும் இருக்கிறார் ஆனால் எதிலும் இருக்கிறவர் அல்ல.


இறைவனைக் குறித்த விளக்கம்


சமீப காலங்களில் கடவுள் என்ற வார்த்தை தவறாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது கிறிஸ்தவம் சரியான பொருளை காண்பித்து புதுப்பிக்கிறது அவசியமாயிருக்கிறது


Plato:


இறைவன் நல்லவைகளை செய்கிறவரும் நிலையான சிந்தை உடையவர் 


Fristatile:


இறைவன் எல்லா உயிர்களுக்கும் முதன்மையானவர்


Spinoza:


இறைவன் முழுமையானவர் உலகையே காப்பவர் உயிர் வாழும் ஒவ்வொருவருக்கும் காரணர் அவரே


Kant:


இறைவன் தானாகவே இருக்கிறார் அவரே இயற்கையின் காரணர் சர்வாதிகாரி கடமையாற்ற வ எல்லாம் நீதிக்கும் காரணகர்த்தா.


தேவன் ஆவியாய் இருக்கிறார் முற்றிலும் நித்தியமானவர் தன்னில் மாற்றம் இல்லாதவர் அவரை ஞானம் வல்லமை பரிசுத்தம் நீதி அவரே உண்மை நன்மை என்று west ministers shorter chatecdhism கூறுகிறது.


எல்லாவற்றிலும் முதலும் முடிவும் இறைவனே ஆவார் என்று Andrew fullar கூறியுள்ளார்.


"தேவன் முடிவில்லாதவர் ஆவியாய் இருக்கிறார் அவரே எல்லாவற்றின் உற்பத்தி காப்பாற்றுதல் முடிவும் இருக்கிறது" என்று strong கூறுகிறார்.


"தேவன் எல்லா ஞானமும் வல்லமையும் நன்மைகளும் நிறைந்த நித்தியமானவர் "என்று John miley கூறுகிறார். 


இறைவன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் 


Cosmological Argument


Cosmos என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து இது வந்தது இதன் பொருள் உலகம் என்பதாகும் ஒன்றும் இல்லாமல் இருந்து எதுவும் உண்டாகவில்லை அது உருவாவதற்கு மூல காரணம் ஒன்று உண்டு. அதுதான் கடவுள். உதாரணமாக (ஒருவர் whatch madein India இதை உருவாக்கினவர் ஒருவர் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது).


Teleological Argument


Telos என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது . இதன் பொருள் முடிவு என்பதாகும் .உதாரணமாக ஒரு வாட்ச் தன்னை ஒருவர் உருவாக்கினார் என்பதை நிரூபிக்கிறது. ஒருவரின் கற்பனை திறன் அதற்கு பின்னால் இருந்துதான் ஒரு பொருளாக உருவாக்கப்பட்டது. ( நோக்கம்)


Ontological Argument


இது குழப்பத்தில் ஆரம்பித்து அதை நிரூபிக்க முயற்சிப்பதாகும். ஒருவன் இல்லாத கடவுள் மீது தன் நம்பிக்கையை வைப்பதாக கற்பனை செய்தால் பிறகு அதை காட்டிலும் மேலான கடவுளை கற்பனை செய்வது கூடாத காரியம். இந்த விவாதத்தின் முடிவு என்னவென்றால் எல்லா மனிதனும் கடவுளைக் குறித்த அறிவு உடையவனாய் இருக்கிறான் என்பதே ஆகும்.


Anthropological Argument


ஒரு மனிதனின் பண்பும் சாட்சியும் அதை உருவாக்கின வரையே தேடுகிறது. உதாரணமாக பாரா மீட்டர் ஒரு தகவலையும் தரவில்லை என்றால் அது கொடுக்கும் தகவல் பொய்யானவை ஆகும். என்றாலும் நம்முடைய மனசாட்சியை அது தனக்கு கிடைத்த தகவலின் படி நாம் செய்ய வேண்டிய காரியத்தை உணர்த்துகிறது. மனிதனின் அறிவும் பண்புகளும் அதைப் படைத்த ஆசானையே தேடுகிறது. மனது உலக பொருளில் இருந்து ஆவி சரீரத்திலிருந்தோ வளர்ச்சி அடைவது இல்லை.


வேதத்தில் உள்ள ஆதாரங்கள்


வேதாகமம் தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை ஆனால் முழு உலகிலும் தேவனை அறிகிற ஞானம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் மேற்கோள் காட்டுவதாகவும் வெளிப்படுத்துவதாகவும்இது விளங்குகிறது. (ரோம 1:19-21, 28, 32; 2:5; சங் 4:1) வேதமானது இவ்வகை புத்தி கூர்மையான கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது யூதர்களின் வரலாறு தீர்க்கதரிசனம் ஒரு போதும் தேவனை மட்டுப்படுத்தி பேசுபவை அல்ல வேதம் கூறும் சாட்சிகளின் தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிக்க முடியவில்லை என்றால் அந்த புத்தகங்களை நாம் விலக்கிவிடுவது நல்லது.


தேவனைக் குறித்த வெளிப்படுத்துதல்


# பொதுவான வெளிப்படுத்துதல்


இறையியல் மூலமாக தேவனுடைய வெளிப்படுத்துதல் in உண்மைகளை வெளிப்படுத்த முடியும். revelation என்பதற்கு கிரேக்க வார்த்தை apokalupasis இதன் பொருள் மறைக்கப்படாத அல்லது மூடப்படாத என்பதாகும். பொதுவான வெளிப்படுத்துதல் என்பது தேவனை குறித்தும் தேவனுடைய குணாதிசயங்களை குறித்தும் வெளிப்படுத்தி அதனால் தேவன் இருக்கிறார் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள செய்வதே ஆகும். (சங் 19:1-6)


வானங்கள் மனிதர்கள் மத்தியில் பரலோகத்தை கொண்டுவரும் மாட்சிமை பொருந்திய தேவனிடமிருந்து ஒருவரும் விளக்கப்பட முடியாது என்ற தேவ மகிமையை நமக்கு போதிக்கின்றன. இந்த பூமி அவற்றின் அழகு. ஒற்றுமை வேற்றுமை இவையாவும் தேவனுடைய கரத்தில் கிரியைகளை வெளிப்படுத்துகிறது. தேவன் மக்களின் தேவைகளை சந்திப்பதில் மூலமும் ஆளுகை செய்வதின் மூலமும் தன்னை மனிதனுக்கு வெளிப்படுத்துகிறார். (மத்தேயு 5:45; அப் 14:15-17). அதனால் அந்த இரக்கமற்ற தேவனுக்கு பதிலளிக்க அவர்களாய் நாம் இருக்க வேண்டும் மேலும் இயற்கையாகவே தேவனைக் குறித்த அறிவு எல்லா மனிதருக்கும் மனசாட்சியின் மூலம் வெளிப்படுத்துகிறார்.


# விசேஷ வெளிப்படுத்தல்


பொதுவான வெளிப்படுத்தலை ஏற்றுக்கொள்வது போல் விசேஷ வெளிப்படுத்தலை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு அநேக சாட்சிகள் உள்ளன தேவனே தன்னை சொப்பனங்கள் மூலமாகவும் அல்லது தரிசனங்கள் மூலமாகவும் வெளிப்படுத்துகிறார். சிலரிடம் நேரடியாகவும் அசரீரி மூலமாகவும் வெளிப்படுத்துகிறார். அற்புதங்கள் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். தேவன் தன்னை வார்த்தையின் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் என்ற இரண்டு வகைகள் உண்டு.




Lesson- 2


தேவன் இருக்கிறார் 

The Existence of God


Desism

கடவுள் படைக்கப்பட்ட நாளிலிருந்து முழு உலகமும் தானாகவே தன்னைக் காப்பாற்றிக் கொள் கிறது இறைவன் உருவாக்கியவர் காப்பாற்றுகிறவர் அல்ல என்று இந்தக் கொள்கை கூறுகிறது.


Atheism

இந்தக் கொள்கை கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறது.


Polytheism


இந்த கொள்கையை உடையவர்கள் பல தெய்வங்கள் உண்டு என்பதை நம்புகின்றனர்.


Theism


இந்தக் கொள்கையை உடையவர்கள் கடவுள் எல்லாவற்றையும் படைத்து காத்து ஆளுகிறவர் என்பதனை நம்புகின்றனர்.


Monotheism

இந்தக் கொள்கை ஒரே கடவுளை குறிக்கிறது போதிக்கிறது.


Pan theism


இந்தக் கொள்கை கடவுள் தான் எல்லாம். எல்லாமே கடவுள்தான் என்பதை வலியுறுத்துகிறது.


தேவனுடைய பெயர்கள்


முதலாவதாக, பழைய ஏற்பாட்டில் வெளிபடுத்தப்பட்டுள் தேவனுடைய பெயர்களை 

அவற்றின் மூலமொழியில் இருந்து காண்போம். 


குறிப்பு:- 


இந்த பாடத்தில் வரும் தேவனுடைய பெயர்கள் வேதத்தின் பல இடங்களில் 

எழுதப்பட்டு இருந்தபோதிலும் ஒவ்வொன்றிற்கும் ஒன்று அல்லது இரண்டு 

வசனங்கள் மட்டுமே எடுத்துகாட்டாக தரப்பட்டுள்ளது. 


I. முதன்மையான பெயர்கள்:


      1. ஏலோஹீம்


* ஏலோவா, ஏலா அல்லது ஏல் என்ற சொல்லை தழுவிய சொல்லாக ஏலோஹீம் 

அமைந்துள்ளது. இது பன்மையாகவும் (ஆதி 1:26; 3:22) சில இடங்களில் 

ஒருமையாகவும் (சங் 45:7) பயன்படுத்த பட்டுள்ளது. 


* ஆங்கிலத்தில் Sheep என்ற சொல் பன்மையாகவும் ஒருமையாகவும் 

பயன்படுத்துவது போல இந்த சொல் பயன்படுத்தபடுகிறது. 


* பழைய ஏற்பாட்டின் தமிழ்மொழியாக்கத்தில் இது தேவன் என்று பலமுறை 

எழுதப்பட்டுள்ளது. 


* ஆதி 1:1 ல் யாவற்றையும் படைத்ததை கூறும்போது இச்சொல் முதல் முறையாக 

பயன்படுத்தப்பட்ட படியால் இச்சொல் படைக்கிறவர் (சிருஷ்டிகர்) என்று 

பொருள்படும் என கருதப்படுகிறது. 


* ஏலோவா, #ஏலா என்ற சொல்லிலிருந்து ஏலோஹீம் வந்தது என்று கருதுவதால் 

வணங்கப்படதக்கவர் என்றும், ஏல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்று 

கருதுவதால் வல்லமையுள்ளவர் என்றும் இதற்கு பொருள் கூற * ஏலோவா, ஏலா 

என்ற சொல்லிலிருந்து ஏலோஹீம் வந்தது என்று கருதுவதால் வணங்கப்படதக்கவர் 

என்றும், ஏல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்று கருதுவதால் 

வல்லமையுள்ளவர் என்றும் இதற்கு பொருள் கூற முடியும். 


* ஏலோஹீம் பன்மை சொல்லாகவும் இருப்பதால் தேவத்துவத்தில் ஒன்றுக்கு 

மேற்பட்ட நபர்கள் இருப்பதை இது வெளிபடுத்துகிறது. 


* தேவன் என்ற தமிழ் சொல்லை (தமிழிலிருந்து வடமொழிக்கு அல்லது வடமொழியில் 

இருந்து தமிழுக்கு) பயன்படுத்துவதை மாற்றி இறைவன் அல்லது கடவுள் என்று 

கூற வேண்டும் என்று பலர் முயற்சி செய்கின்றனர். 


* தேவன் என்பது தேவி என்ற சொல்லையும் பல தேவர்களை குறிப்பதான தேவர்கள் 

என்ற சொல்லையும் சேர்ந்தது என்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்பது 

அவர்களின் வாதம். 


* ஆனால், ஏலோஹீம் என்ற சொல் (1இரா 11:5,33) ல் #தேவி என்றும் (யாத் 

12:12; 20:3) போன்ற பல இடங்களிலும் தேவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது 

என்பதை கருத்தில் கொண்டால் இறைவன், கடவுள் என்ற எந்த சொல்லையும் விட 

தேவன் என்ற சொல்லே ஏலோஹீம் என்பதற்கு பொருத்தமானது என்பது 

மறுக்கமுடியாத உண்மை. 


* தேவாதிதேவன் (Elohim of Elohim) என்று எழுதப்பட்ட உபா 10:17; சங் 

136:2 போன்ற பகுதிகளுக்கு பொருத்தமான சொல் #தேவன் என்ற சொல்லே. 


* புதிய ஏற்பாடிலும் Theos என்ற கிரேக்க சொல்லுக்கு தேவன் என்பதே 

பொருத்தமான சொல் ஆகும். 


* ஏலோஹீம் என்ற சொல் 1இரா 18:38 ல் #தெய்வம் என்றும் யோனா 1:6 ல் 

சுவாமி என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. 


தேவனுடைய முதன்மை பெயர்களையும் அதன் பொருளையும் கீழே காண்போம்: 


குறிப்பு:- 


கீழே கொடுக்கபட்டுள்ளதில் "எ" என்பது எபிரெய மொழியையும், "த" என்பது 

தமிழையும், "பொ" என்பது பொருளையும் குறிக்கும் சொல்லாகும். 


* எ- ஏலோஹீம் 

த- தேவன் 

பொ- யாவையும் படைகிறவர், வணங்கப்பட தக்கவர், வல்லமையுள்ளவர். 

ஆதி 1:1 


* எ- ஏல் 

த- தேவன் 

பொ- வல்லமையுடையவர். 

ஆதி 35:1 


* எ- ஏலோவா 

த- தேவன் 

பொ- வணங்கபடதக்கவர், வணங்கப்படும் பொருள். 

உபா 32:15 


* எ- ஏலா 

த- தேவன் 

பொ- வணங்கபடதக்கவர், வணங்கபடும் பொருள். 

எஸ்றா 4:24 


* எ- கர் 

த- கன்மலை 

பொ- கன்மலை 

ஏசா 44:8 


* எ- அதோன் 

த- ஆண்டவர் 

பொ- ஆட்சி செய்கிறவர் 

யாத் 23:17 


* எ- அதோனை 

த- ஆண்டவர், சில இடங்களில் கர்த்தர் 

பொ- எஜமான், உரிமையாளர் 

உபா 10:17; ஆதி 18:3 


* எ- மேர் 

த- ஆண்டவர் 

பொ- உன்னதமானவர், உயர்ந்தவர் 

தானி 2:47; 5:23 


* எ- யேகோவா (யாவே) 

த- யேகோவா, கர்த்தர் 

பொ- நிலையாக இருகிறவர் உடன்படிக்கையையும், வாக்குதத்ததையும் 

நிறைவேற்றுகிறவர். தம்மை வெளிப்படுத்துகிற என்றும் வாழ்பவர். 

ஆதி 4:1 


* எ- யா (Yah) 

த- யேகோவாவின் சுருக்கம் 

பொ- யேகோவா என்பதற்கான பொருளே இதற்கும் பொருந்தும் 

யாத் 15:2 


* எ- யெஹெயே அஷெர் யெஹெயே 

த- இருக்கிறவராக இருக்கிறேன் 

பொ- என்றும் இருப்பவர், மாறாதவர் 

யாத் 3:14 


* எ- யெஹெயே 

த- இருக்கிறேன் 

பொ- என்றும் இருப்பவர், மாறாதவர் 

யாத் 3:14



Lesson- 3


தேவனுடைய பெயர்கள் தொடர்ச்சி…..


II. ஏல் என்ற பொருளுடன் இணைந்த பெயர்கள்:- 


ஏல் என்ற எபிரெய சொல்லிற்கு "வல்லமையுடையவர்" என்று பொருள். தமிழ் 

வேதாகமத்தில் இந்த சொல் "தேவன்" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த சொல்லுடன் 

இணைந்த தேவனுடைய பெயர்களை காண்போம். 


1. El Elyon - உன்னத தேவன். ஆதி 14:18 


2. El Shaddai - சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதி 17:1) எல்லாம் செய்யவல்ல 

தேவன், போதுமானவரான தேவன் (Almighty GOD, All sufficient GOD), வல்லமை 

அளிக்கிறவர், தமது ஜனத்தின் சகல தேவைகளை சந்திக்கிறவர், பாதுகாக்கிறவர் 

என்ற பல கருத்துகள் அடங்கிய 

பெயர். 


3. El Olam - சதாகாலமுமுள்ள தேவன் (Everlasting GOD) ஆதி 21:33) 


4. El Gadol - மகா தேவன் (சங் 95:3) 


5. El Chai - ஜீவனுள்ள தேவன் யோவா 3:10 


6. El Qanna, El Qanno - எரிச்சலுள்ள தேவன் மாத் 20:5;34:14 


7. El Aman இரக்கமுள்ள தேவன் உபா 4:31 


8. El Rachum - உண்மையுள்ள தேவன் 8. El Rachum - உண்மையுள்ள தேவன் உபா 7:9 


9. El Roi -0- எள்னை காண்கின்ற தேவன் ஆதி 16:13 


10. El Gibbor - வல்லமையுள்ள தேவன் ஏசா 9:6 


III. யேகோவா என்ற பெயருடன் இணைந்தவை:


யேகோவா என்றால் மாறாதவர், நிலைத்திருக்கிறவர் என்றும், தாமாக 

உயிருடனிருந்து (Self existing one) தம்மை வெளிப்படுத்துகிறவர் என்றும் 

பொருள். எபிரெய மொழியில் உயிரெழுத்துக்கள் கிடையாது. YHWH என்ற இப்பெயர் 

மிகவும் புனிதமானது என்று கருதிய யூதர்கள் அதை கூறாமல் விட்டுவிட்டனர். 

எனவே அதன் சரியான உச்சரிப்பு இப்பொழுது தெரியாது. யேகோவா என்றும் யாவே 

என்றும் உச்சரிக்கப்பட்டது. இப்பெயர் "இருக்கிறவராகவே இருக்கிறேன்" 

(Yeheye Asher Yeheye) என்ற பெயருடன் தொடர்புடையது. தமிழ் வேதாகமத்தில் 

இச்சொல் "கர்த்தர்" என்று பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது. 


1. யேகோவா ஏலோஹீம் (YHWH ELOHIM) - தேவனாகிய கர்த்தர். 


*. யேகோவா ஏலோஹே தா - உன் தேவனாகிய கர்த்தர். 


*. யேகோவா ஏலோஹீனு - நம்முடைய தேவனாகிய கர்த்தர். 


* யேகோவா ஏலோஹே - என் தேவனாகிய கர்த்தர். 

- ஆதி 2:4; யாத் 20:5; சங் 99:5; சகரி 14:5 


2. அதோனை (ADONAI YHWH) - கர்த்தராகிய ஆண்டவர் ஆதி 15:2,8 


3. யேகோவா ஏலியோன் (YHWH ELYON) - உன்னதமான கர்த்தர் சங் 7:17 


4. யேகோவா ஹோசீனு (YHWH HOSEENU) - நம்மை உண்டாக்கின கர்த்தர் சங் 95:6 


5. யேகோவா சாபோத் (YHWH SABOATH) - சேனைகளின் கர்த்தர் 1சாமு 1:3 


6. யேகோவா நிசி (YHWH NISSI) - நமது கொடியாகிய கர்த்தர் யாத் 17:15 


7. யேகோவா யீரே (YHWH YEREH) - பார்த்துக்கொள்கிற கர்த்தர், தேவைகளை 

நிறைவாக்குகிற கர்த்தர் ஆதி 22:8-14 


8. யேகோவா சிட்கீனு (YHWH TSIDKEENU) - நமது நீதியாக இருக்கிற கர்த்தர் எரே 23:6 


9. யேகோவா மெக்கடிஷ்கெம் (YHWH MEKKADISHKEM) - தூய்மையாக்குகிற 

கர்த்தர், பரிசுத்தமாக்குகிற கர்த்தர் யாத் 31:13 


10. யேகோவா ராய், யேகோவா ராஹீ (YHWH ROHI) - மேய்பராகிய கர்த்தர் சங் 23:1 


11. யேகோவா ரஃப்பெக்கா, யேகோவா ரஃப்பா (YHWH RAPHEKA) - பரிகாரியாகிய 

கர்த்தர், சுகமாக்குகிற கர்த்தர் யாத் 15:26 


12. யேகோவா ஷாலோம் (YHWH SHALOM) - (நமது) சமாதானமாகிய கர்த்தர் நியா 6:24 


13. யேகோவா ஷம்மா (YHWH SHAMMAH) - நம்மோடிருக்கிற கர்த்தர் (The LORD is 

present) எசே 48:35 


14. யேகோவா ஷமர் (YHWH SHAMAR) - (உன்னை) காப்பாற்றுகிற கர்த்தர் சங் 121:5 


15. யேகோவா யாஷா (YHWH YASHA) - இரட்சகராகிய கர்த்தர் ஏசா 60:16 


IV. புதிய ஏற்பாட்டில் உள்ள சில பெயர்கள்:- 


1. கிரேக்க மொழியில் Theos என்று என்று எழுதப்பட்டுள்ள சொல் தமிழில் 

தேவன் என்றும் (மத் 1:23) தேவர்கள் என்றும் (யோவா 10:34,35) தெய்வங்கள் 

என்றும் (அப் 7:40) தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பழைய ஏற்பாடில் 

வரும் ஏலோஹீம் என்ற சொல்லுடன் ஒப்பிடதக்கது. இச்சொல்லை சார்ந்த Thea 

என்ற சொல் தேவி என்று அப் 19:27,35,37 ல் எழுதப்பட்டுள்ளது. 


2. கிரேக்க மொழியில் Kurios என்பது மத் 1:20; 7:21 போன்ற வசனங்களில் 

கர்த்தர் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை குறிப்பதாக 

பயன்படுத்தும் வசனங்களில் உடையவர்கள் (உரிமையாளர் Owners லூக்கா 19:33), 

ஆண்டவன் (மத் 18:25), எஜமான் (மத் 21:40) என்று எழுதப்பட்டுள்ளது. Kurios 

என்ற சொல்லின் பொருள் ஆட்சி செய்பவர், எஜமான், மதிப்பிற்குரியவர் 

என்பதாகும். பிதாவையும் கிறிஸ்துவையும் ஆவியானவரையும் இச்சொல்லால் 

அழைப்பதை புதிய ஏற்பாட்டின் பல வசனங்களில் காணலாம். 


3. கிரேக்க மொழியில் Despotes என்ற சொல் லூக் 2:29; யூதா 4 போன்ற 

இடங்களில் ஆண்டவர் என்றும் அப் 4:24 ல் கர்த்தர் என்றும் மனிதர்களை 

குறிக்கும் 1பேது 2:18 போன்ற சில இடங்களில் எஜமான்கள் என்றும் 

எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் அரசாள்பவர் (சர்வதிகாரி), எஜமானர் 

என்பதாகும். 


V. பிதாவாகிய தேவனின் சில பெயர்கள்:- 


* திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் (சங் 68:5) 


* பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதா (மத் 5:16) 


* பரம பிதா (மத் 6:14) 


* திராட்ச்சை தோட்டகாரர் (யோவா 15:1) 


* நீதியுள்ள பிதா (யோவா 17:25) 


* நம்முடைய பிதாவாகிய தேவன் (ரோம 1:3) 


* அப்பா, பிதா (ரோம 8:15; கலா 4:6) 


* நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவன் (ரோம 15:5) 


* இரக்கங்களின் பிதா (2கொரி 1:3) 


* சகல ஆறுதலின் தேவன் (2கொரி 1:3) 


* மகிமையின் பிதா (எபே 1:17) 


* எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் (எபே 4:6) 


* ஆவிகளின் பிதா (எபி 12:9) 


* சோதிகளின் பிதா (யாக் 1:17) 


* இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் (வெளி 1:8) 


* அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும் (வெளி 1:8)



Lesson- 4


தேவனின் இயல்புகள்


தேவனுடைய இயல்புகளும் குணாதிசயங்களும் ஒரே அர்த்தத்தை கொண்டு வருவதாக நாம் உணர்கிறோம். ஆனால் குணாதிசயங்கள் என்பது அவரை மதிப்பிற்குரிய அல்லது மதிக்கக் கூடிய காரியங்கள். இயல்பு என்பது முடிவு இல்லாதவை.


தேவனுடைய இயல்புகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்


1.Natural Attributes பொதுவான இயல்புகள்

2.Moral Attributes பண்பு இயல்புகள்


Natural Attributes பொதுவான இயல்புகள்


தேவன் எங்கும்

நிறைந்தவர் Omni Present


அதாவது ஒரே நேரத்தில் எங்கும் இருக்கிறவர். Pantheism என்ன கூறுகிறது என்றால் கடவுள் எங்குமிருக்கிறார் எல்லாமே கடவுள் என்று இதை சரியாய் புரிந்து கொள்ளாவிட்டால் ஆபத்தாகிவிடும். Pantheism முழுவதும் தவறானது. A.H.Strong என்ற இறையியல் வல்லுனர் இறைவனுடைய முழு சாராம்சமும் முழு உலகத்தையும் அதிலுள்ள வகைகளையும் நிரப்பியுள்ளது என்று கூறியுள்ளார். சங்கீதக்காரன் நான் எங்கே போனாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர் என்று கூறுகிறார். (சங் 139; எரே 23:23; அப் 17:27-28).


தேவன் எல்லாம் அறிந்தவர்



நாம் செய்யும் ஒவ்வொன்றையும் தேவன் காண்கிறார் என்று உணரும் ஒருவர் தன் தீய வழிகளை சரி செய்து நல்ல வழியில் நடக்க தேவனையே நோக்கி பார்ப்பார். ஒரு விசுவாசிக்கு எங்கும் நிறைந்திருக்கும் தேவன் ஆறுதலுக்கு காரணம் ஆகையால் அவர் இருக்கிறார் என்று சிந்தை அவருக்கு நம்மை ஒப்புக் கொடுக்கவும்  உற்சாக படவும் செய்கிறது. இது லத்தீன் மொழியில் உள்ள Ominis என்ற பதத்தில் இருந்து வந்தது இதன் பொருள் எல்லாம் All.


Scintia (அறிவு) (science means stnoty) தேவன் எல்லாம் அறிந்தவர் மூன்று காலங்களையும் அறிந்தவர் ( கடந்த காலம் நிகழ்காலம் வருங்காலம் ) பின்னால் நடக்கும் காரியங்களை முன்கூட்டியே கூறும் தேவஞானத்தை வேதத்தில் காணலாம் (அப் 2:23; ஏசாயா 49:2; 1பேது 4:3). கடந்த காலத்தில் எப்படி இருந்ததோ நிகழ்காலத்தில் எப்படி இருக்கிறதோ வருங்காலத்தில் எப்படி இருக்கப் போகின்றதோ அவைகளை அப்படியே தேவன் அறிவார்.


செயல்முறை படுத்துதல்


ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் விரோதமாய் வந்தாலும் அவனுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை கர்த்தர் அவனோடு இருக்கிறார் (மத் 10:31) தலையில் உள்ள மயிர் என்ன பட்டிருக்கிறது. (அப் 15:18; மத் 6:18,38; சங் 139:4).


தேவன் எல்லா ஆற்றலும் உடையவர்


தேவன் எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல் உடையவர் இதனால் அவர் விரும்புகிற எல்லாவற்றையும் அவர் செய்வார் இதன் பொருள் தவறானவை எதையும் செய்வார் என்பது அல்ல அதனால் அவருடைய வல்லமை கட்டுப்பாட்டுக்குட்பட்டது அல்ல. அவர் எல்லா சிருஷ்டிகள் மேலும் சர்வ வல்லமையும் அதிகாரமும் உடையவராய் இருக்கிறார். (சங் 147:13-18; எரே 32:17; மத் 19:26; லூக்கா 1:37; ஆதி 1:17; ரோம 4:8; யோபு 42:2).இயற்கையின் மேல் (யோபு 1:17; 42:2) இருளிலிருந்து வெளிச்சத்தை பிரித்தார் (ஆதி 1:4) ஆகாய பிரிவிலிருந்து தண்ணீரை பிரித்தார் (ஆதி 1:9-10) தண்ணீரை தன் கைப்பிடியினால் அளக்கிறார் (ஏசாயா 40:12) ஜாதிகள் ஏற்றசாலில் எண்ணுகிறார் (ஏசாயா 40:15)

மனிதன் மேல் (தானி 4:30-32)

தூதர்கள் மேல் (சங் 103:20)

சாத்தானின் மேல் (யோபு 12:2,6)

மரணத்தின் மேல் (எபே 2:14)



செயல்படுத்துதல்


ஒரு விசுவாசி தன் ஒவ்வொரு நடக்கையிலும் தேவனையே நம்ப வேண்டும் ஏனென்றால் சிருஷ்டிபுக்கும் பாதுகாத்தலுக்கும் தேவையானதை சந்திப்பதற்கும் ஆறுதலுக்கும் நம்பிக்கைக்கும் அவரே மூல காரணமாய் இருக்கிறார். அவிசுவாசி எப்பொழுதும் பயந்து தத்தளித்துக் கொண்டு இருப்பான்.  (சங் 99:1) பிசாசு தேவனுடைய நாமத்தை சொல்லும்போதே நடுங்குவான் தேவன் அவன் மேல் அதிகாரம் உடையவராய் இருக்கிறார் (எசேக்கியேல் 2:19; வெளி 6:15 19)


தேவன் இணையற்றவர்


அவர் தம்முடைய சிருஷ்டிப்புக்கு தனித்தன்மை வாய்ந்தவர். (ஏசாயா 6:1-3; 46:12-26; 55:5-9)


எல்லா சிருஷ்டிகளை பார்க்கிலும் பெரியவராகவும் உயர்ந்தவராகவும் இருக்கிறார் (1இரா 8:2; ஏசாயா 66:12).  அவர் மிகவும் பரிசுத்தமான இடத்தில் வாசம் பண்ணுகிறார். தன்னை தெய்வமாய் கொண்ட அவருடைய பிள்ளைகள் மத்தியில் வாசம் பண்ணுகிறார் (லேவி 26:11-12; யாத் 37:27; 2கொரி 6:6)


செயல்படுத்துதல்


ஒரு விசுவாசி தேவன் எல்லா சிருஷ்டிபுகளுக்கும் மேலானவர் என்று அறிந்திருக்கிற படியினாலே உன்னதமான தேவன் என்னை படைத்திருக்கிறார் என்று அறிந்து அவருக்கு நன்றி செலுத்துகிறவனாய் இருக்க வேண்டும்.


தேவன் நித்தியமானவர்


அவர் நித்தியத்திற்கும் நித்தியமானவர் (சங் 90:2; 102:12; ஏசாயா 15:15). தேவன் காலங்களுக்கு உட்பட்டவர் அல்ல அவரின் கடந்த காலம் எதிர்காலம் என்று ஒன்றுமில்லை என்றும் இருப்பவர் முடிவில்லாதவர் (சங் 90:14; 2பேது 3:8) ஆகவே வேதத்தில் நானே என்று வர்ணிக்கப்படுகிறார் (யோபு 8:58).


தேவன் மாற்றம் இல்லாதவர்


தேவனின் இயல்புகளில் அவர் மாற்றம் இல்லாதவர் அவர் தன் ஜனங்களுக்கு செய்யும் காரியங்களில் முழுமையானவர் (எண் 23:19; சங் 102:26,28; ஏசாயா 47:14; மத் 3:6; எபே 1:11,12; யாக் 1:1). இதனால் தேவன் உடனடி காரியங்களுக்கு விழிப்பு உள்ளவராய் காணப்பட மாட்டார் என்பது பொருளல்ல. உதாரணமாக நினிவேயின் மக்கள் முற்றிலும் மனம் திரும்பிய பொழுது தன்னுடைய தீர்மானத்தை மாற்றினார். (யோனா 3:6-10).


நீதிமான்களின் ஜெபத்திற்கு தேவன் தன் சிந்தையை மாற்றுகிறாய் இருக்கிறார் (2இரா 20:2-6; ஏசாயா 30:26).



Lesson- 5


தேவனின் பண்பியல்புகள்


# தேவன் பரிசுத்தமுள்ளவர்


தேவனின் பண்புகளில் முதன்மையானது பரிசுத்தமாகும். அவர் முற்றிலும் பாவம் இல்லாதவர் நீதியுள்ளவர் (லேவி 11:44-45; சங் 85:13; 145:17; மத் 5:48) வேதாகமம் முழுவதும் தேவனுடைய பரிசுத்தம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். அதாவது சீனாய்மலையின்மேல் தேவன் இறங்குதல் (யாத் 19:22-25) ஆசரிப்புக் கூடாரத்திலும் தேவாலயத்திலும் உள்ள பிரிவுகள் (பரிசுத்த ஸ்தலம் மகா பரிசுத்த ஸ்தலம்) (யாத் 26:33; 1இரா 6:16-19) அங்கே விசேஷமான பலிகள் இஸ்ரவேலர்கள் தேவனை சந்திக்க கடந்து வரும்போது கொண்டுவரப்பட வேண்டும். தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் ஒரு விசேஷித்த ஆசாரியத்துவம் காணப்படுகிறது. தேவன் பரிசுத்தமானவர் என்று

அழைக்கப்பட்டார்.


புதிய ஏற்பாட்டில் (யோவான் 17:11; எபே 12:16; 1பேது 1:15) ஆதாமும் ஏவாளும் பாவம் இல்லாதவர்களாக அ

படைக்கப்பட்டனர் இன்னொரு வகையில் பார்ப்போமானால் தேவனும் பாவம் இல்லாதவர். (எண் 23:19; 2தெச 2:13; தீத் 1:2; எபே 6:18) அவருடைய பரிசுத்தமானது தேவன் தம்முடைய மக்களுக்கு வைத்துள்ள திட்டங்களையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதில் உள்ளது.



செயல்படுத்துதல்


தேவனுடைய பரிசுத்தத்தை குறித்து மூன்று காரியங்களை பார்க்கலாம். பாவிகளுக்கும் தேவனுக்கும் இடையில் இடைவெளி காணப்படுகிறது (ஏசாயா 59:11). மனிதனுடைய வீழ்ச்சிக்கு முன்பு வரையில் தேவனுக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது ஆனால் அந்த தொடர்பு உடைக்கப்பட்டு விட்டது அதை புதுப்பித்தல் கூடாத காரியம் ஆகும் ஆனால் அதிலிருந்து முற்றிலும் விளக்கப்படும் ஒருவர் தேவனோடு கூட ஐக்கியம் கொள்ள முடியும்.


மனிதன் தேவனோடு கண்டிப்பாக நெருங்கிய ஆக வேண்டும் மனிதன் ஒரு போதும் பாவம் இல்லாத நிலையை தேவனுக்கு சேராத நிலையில் இல்லாத வரையிலும் அடைய முடியாது. ஆனால் (ரோம 5:2) கிறிஸ்துவின் மூலமாக நாம் தேவனிடத்தில் சேறுகிறோம்.


தேவனுக்கு பயப்படும் பயத்தோடும் பக்தியோடும் நாம் தேவனிடத்தில் சேர வேண்டும் (எபி 12:22-29).


# தேவன் நீதியுள்ளவர்

 (உபா 32:4; 2யோவா 1:9)


எல்லா அநியாயத்திற்கும் விலக்கி மீட்க அவர் உண்மையுள்ள வரும் நீதி உள்ளவருமாய் இருக்கிறார் மனிதன் மனம் திரும்பும் போது அவர்களை எல்லாம் தண்டனைகளிலிருந்து அவர்களை விடுதலை ஆக்குகிறார். பாவிகளை மரணத்தினால் நியாயம் தீர்க்கிறார். (ரோம 5:12).


அவர் பாவிகளை நேசிக்கிற படியினால் நீதி உள்ளவராய் இருக்கிறபடியினால் அவர் பாவிகள் மேல் சினம் கொள்கிறார் (ரோம 3:5-6; நியா 10:7) அவர் துன்மார்க்கர் மேல் கோபத்தை வெளிப்படுத்துகிறார் (ரோம 1:8) மிக முக்கியமாக விக்கிரக ஆராதனை அவிசுவாசம் போன்ற மக்களுக்கு நியாயக் கேடு செய்தல் (1இரா 14:9; 15:22; சங் 96:21-22; ஏசாயா 10:1-4; ஆமோஸ் 2:6).


இயேசு கிறிஸ்து நீதியுள்ளவர் என்று அழைக்கப்படுகிறார்.


தேவனுடைய நீதி என்பது


அக்கிரமத்தை கண்டித்தல் (வெளி 14:5-7)

தீயவர்களிடமிருந்து தம் மக்களை மீட்டு கொள்ளுதல் (சங் 129:1-4)

பாவிகளை மன்னித்தல்

தம் பிள்ளைகளுக்கு வாக்குத்தத்தங்களை கொடுத்தல்

உண்மை உள்ளவர்களுக்கு பிரதிபலன் அளித்தல்


ஆகிய ஐந்து வழிகளில் தேவனுடைய நீதி வெளிப்படுத்தப்படுகிறது.



# தேவன் நல்லவர்

 (சங் 25:8; 106:8; மாற் 10:18)


தேவன் சிருஷ்டித்தவைகள் எல்லாம் நல்லவைகளாகவே கண்டார் (ஆதி 1:4,10,12,18). மேலும் தேவன் நல்லவர் என்பதை அவருடைய படைப்புகளை காப்பாற்றுவதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம் (சங் 104:10,28; 145:9). தேவன் பக்தி இல்லாதவர்களையும் அவர் போஷிக்கிறார் (மத் 5:45! அப் 14:17) மேலும் தேவன் மிக முக்கியமாக உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் நல்லவராகவே இருக்கிறார் (சங் 145:8-20).


# தேவன் அன்புள்ளவர்


ஏசாயா 4:8 அவருடைய அன்பு எல்லாம் பாவம் மனுகூலத்தையும் அனைத்து கொள்ளுகிறது (யோவான் 3:16; ரோம 5:8) அவருடைய அன்பின் வெளிப்பாடு தம்முடைய ஒரேபேரான குமாரனை பாவிகளுக்கு கொடுத்ததிலிருந்து வெளிப்படுத்தப்படுகிறது. உண்மையான அன்பு உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. உணர்வு இல்லை என்றால் அங்கு தேவனுடைய அன்பு இல்லை. நம்முடைய தேவன் தெய்வம் என்று அழைக்கப்படுகிற மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர். பிதாவும் குமாரனும் அன்பாயிருக்கிறார் குமாரனும் பிதாவின் மேல் அன்புள்ள வராக இருக்கிறார் தேவன் அன்புள்ளவர் ஆகவே இருக்கிறார். (மத்தேயு 3:16; யோவான் 14:31)


தேவன் கிருபையும் இரக்கமும் உள்ளவர்


தேவ கிருபையினால் தகுதியற்றவர்களுக்கு அவர் நல்லவராகவே   வெளிப் படுத்த பட்டுள்ளார். கிருபை பாவியாகிய மனுஷனுக்கு குற்ற உணர்வை கொடுப்பதின் மூலம் வெளிப்படுகிறது. இறக்கம் அவனுக்கு பரிதாபத்துக்குரியதாக காணப்படுகிறது. நம்முடைய பாவங்களுக்கு தக்கதாக நம்மை தள்ளி விடவோ அல்லது அழிக்கவோ அவர் விரும்பவில்லை. (சங் 103:10) ஆனால் நாம் கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் பாவமன்னிப்பு என்னும் கிருபையை நமக்கு தேவன் கொடுக்கிறார்.


தேவனுடைய கிருபைக்கு காத்திருப்பவர்களுக்கு அவர் அளிக்கும் விசேஷித்த கிருபைகள்


தெரிந்து கொள்ளுதல் (எபே 1:4-6)


மீட்பு (எபே 1:7-8)


இரட்சிப்பு (அப் 18:27)


பரிசுத்தமாகுதல் (ரோம 5:21)


பாதுகாத்தல் (2கொரி 12:9)


சேவை (எபி 12:28)


இறுதி பிரதிபலன் (1கொரி 1:3)


தேவன் மனதுருக்கம் உள்ளவர்


தேவன் எல்லாம் ஜனங்கள் மேலும் மனதிற்கும் உள்ளவராயிருக்கிறார் (2இரா 13:23; சங் 86:15) மனதை உருக்கும் என்றால் கஷ்டப்படும் ஒருவருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு வருத்தப்படுவது ஆகும். இயேசு கிறிஸ்துவும் மனதுருக்கம் உடையவராய் காணப்பட்டார் (லூக்கா 4:18; மத் 9:36; 14:14; 15:32; 20:34; மாற் 1:41; அப் 6:34).


தேவன் பொறுமை உள்ளவர்


தேவன் பொறுமையுள்ளவரும் கோபப்படுவதற்கு தாமதம் உள்ளவருமாய் இருக்கிறார். (யாத் 34:6; எண் 14:18; ரோம 2:4; 1தீமோ 1:16). தேவன் உலகத்தை அழிக்கும்படியாக நியாயத்தீர்ப்பு செய்வது இல்லை ஏனென்றால் அவர் தம்முடைய பொறுமையினால் பாவிகள் மனம் திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்கு தருணத்தை தருகிறார்.


தேவன் சத்யம் உள்ளவர்


(உபா 32:4; சங் 31:5; யோவான் 3:33) இயேசு கிறிஸ்துவும் தன்னை சத்தியம் என்று அழைத்துள்ளார் (யோவான் 14:16) ஆவியானவரை சத்திய ஆவியானவர் என்று அறிந்திருக்கிறோம். ஏனென்றால் தேவன் நம்பத்தக்க வரும் அவள் சொல்லிலும் செயலிலும் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவருடைய வார்த்தைகளும் சத்தியம் என்று விளக்கப்படுகிறது (சங் 119:43; ஏசாயா 45:19; யோவான் 17:17).


தேவன் உண்மையுள்ளவர்


(யாத் 34:6; உபா 7:9; எபி 10:23) தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் எதை செய்கிறாரோ செய்வேன் என்று கூறினாரோ அதை செய்கிறார். ஆனால் அவர் எப்பொழுதும் அவருடைய வாக்குத்தத்தங்களை யும் எச்சரிப்பு உடையவராகவும் இருக்கிறார் (எண் 35:1-15; 2தீமோ 2:13).


தேவன் தம்முடைய சிநேகிதர்களுக்கு தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராயிருக்கிறார் (ஆதி 15:4; 2சாமு 7:15; 1இரா 21:17)


சோதனை நேரத்திலும் (1கொரி 10:13) பாவங்களை மன்னிப்பதிலும் (1யோவா 1:9) ஜெபத்திற்கு பதில் கொடுப்பதிலும் (சங் 143:3) உண்மையுள்ளவராயிருக்கிறார்.


Post a Comment

0 Comments