ஞானஸ்நானம் - ஒருஆய்வு

 ஞானஸ்நானம் - ஒருஆய்வு

       Dr.Peter Prakasam


ஞானஸ்நானம் குறித்து

இயேசுவின் கட்டளை


மத் 28:19 “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, 

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து," 


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளையை விளங்கிக் கொள்ளாமல் இன்றைக்கு இருக்கிற கிறிஸ்துவ உலகத்திலே ஞானஸ்நானத்தை குறித்து பலவகையான கருத்துக்கள் காணப்படுகிறது.


தெளிப்பு ஞானஸ்நானம் அல்லது குழந்தை ஞானஸ்நானம் தான் சரியானது என்றும் மேலும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியினால் ஸ்நானம் எடுத்தால் போதது, மீண்டும் இயேசுவின் நாமத்தில் மாத்திரம் தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றும் , திருத்துவத்தை மறுதலித்து போதிக்கிறார்கள்.


கிரேக்க வார்த்தையில் “ஞானஸ்நானம்” என்பது "BAPTIZO" என்று அர்த்தம். 


"தெளிப்பு'' என்பதற்கு "RANTIZO" என்று அர்த்தம்.

 புதிய ஏற்பாடு கிரேக்க பாஷயில் எழுதப்பட்ட போது "RANTIZO" என்ற கிரேக்க வார்த்தை எந்த இடத்திலும் வருவதில்லை. 


ஞானஸ்நானத்தை பற்றி வருகிற எல்லா இடத்தில் "BAPTIZO" என்று தான் வருகிறது. "BAPTIZO" என்றால் "முழ்குதல் அல்லது அமிழ்தல்" "Dip or Immerse" என்று அர்த்தம்.


முழ்குதல் அர்த்தத்தை காட்டும் வசனங்கள்:


 1. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து,என்நாவைக் குளிர பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்: இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான் லூக் 16:24. 


2.இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார் அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (வெளி 19:13)


3. இந்த இரண்டு சம்பவங்களை பார்க்கும் போது முழ்குதல் என்பதை தெரிந்து கொள்ளலாம். "BAPTIZO" என்ற வார்த்தை தான் வருகிறது.


4. அப்போஸ்தலனாகிய யோவான் ஞானஸ்நானம் கொடுக்கும் போது தண்ணீர் மிகுதியான இடத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான் என்று வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங் கொடுத்து வந்தான் ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். (யோ 3:23)


ஞானஸ்நானம் என்றால்

 என்ன ?


  • ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் மேல் வைத்துள்ள விசுவாசத்தை வெளியரங்கமாக பிரகடனம் செய்வது. 

  • கிறிஸ்துவின் மேல் உள்ள பற்றுதலை தெரியப்படுத்துவது.

  •  கிறிஸ்துவின் மரணம், அடக்கம் வெற்றிகரமான உயிர்த்தெழுதலுக்குக் கொடுக்கும் சாட்சி. 

  • இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிதல் (மத் 28:18-20)

  • வருங்கோபத்துக்குத் தப்பிக்கொள்ளுதல் (மத்3:7)

  •  தேவனுடன் செய்யும் உடன்படிக்கை(covenant)

ஒப்பந்தம் (Agreement) (1பேதுரு 3:21)


A.அது தேவ நீதி-

( மத் 3.15, லூக் 7.29) 


“இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” இவைகள் நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கூறிய வார்த்தைகள். மனிதருக்குள்ளே நீதிமான் ஒருவருமில்லை (ரோமர்-3:10).

 நமது நீதி எல்லாம் அழுக்கான கந்தையே (ஏசா-64:6). 

நமது நீதி என்னும் வஸ்திரம் கந்தையாயிருப்பதினால் ஒன்றுக்கும் பிரயோஜனப்படாது (எரே-13:1-7) இப்பொட்டரித்துப்போன நமது நீதி என்னும் வஸ்திரத்திற்கு பதிலாக தேவ நீதியாகிய இயேசுக் கிறிஸ்துவை நாம் தரித்துக்கொண்டவர்களாயிருக்க வேண்டும். அதை நாம் ஞானஸ்நானத்தின் மூலம் செய்கிறோம் (கலா-3:27) 

இதுவே தேவ நீதி. இப்படி வசனத்திற்கு கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் பெறுவதின் மூலம் தேவ நீதியை அறிக்கை செய்கிறோம். (லூக் 7.29)


B.அது தேவ ஆலோசனை

 (லூக் 7.30 )


தேவ ஆலோசனை என்பது நமது ஆலோசனையை விட மிகவும் உன்னதமானது. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா-55:8) 

அவர் தமது நல் ஆலோசனைகள் யாவற்றையும், போதிப்பார். “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்கு போதித்து நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற கர்த்தர். அவருடைய கற்பனைகளை நாம் கவனித்தோமாகில் நலமாயிருக்கும்” (ஏசா-48:7-18) தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் பவுல் பிரசங்கித்தார் (அப்-20:26-27) எனவே தேவ ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாமல் அதை தள்ளி விட்டவர்கள் தங்களுக்கு தாங்களே கேடுண்டாக்கிக் கொண்டார்கள் (லூக்-7:30) தேவ ஆலோசனையின் படி செய்வது நல்லது.


C.அது தேவ கட்டளை 

( மத் 28.18,20)


“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவும்” என்று நமது ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தைகளை நீர் சிந்திப்பீராக. கட்டளை கீழ்ப்படிய வேண்டுமென்றே கொடுக்கப்படுகிறது. பேசுகிறவருக்கு செவிகொடுக்க மாட்டோமென்று விலகினவர்களே தப்பிப்போகாமலிருக்க பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டு விலகினால் எப்படி தப்பிப் போவோம்? (எபி-12:25). மேலும் அவர் கடினமான கட்டளைகளை நமக்குத் தந்து போகாமல் எளிதாய் அனுசரிக்கக் கூடிய கட்டளைகளைத் தந்து போயிருக்கிறார். ஆனால் இலகுவான கட்டளைக்குக் கீழ்ப்படிய மனமில்லை. 

அவருடைய நுகமும், சுமையும் இலகுவானவைகளே  

 (மத் 11:29-30). எல்லாவற்றிற்கும் இருதயமே காரணம். கர்த்தருடைய பிரமாணம் ஒன்றும் கடினமானவைகள் அல்ல. கீழ்ப்படிய மனமுண்டானால் வழி உண்டு. ஒரு வேளை பாலிலோ அல்லது பன்னீரிலோ ஞானஸ்நானம் எடு என்று வேதம் கூறியிருந்தால் அப்படி செய்ய பலர் தங்கள் ஆஸ்தியை செலவு பண்ண ஆயத்தமாயிருப்பார்கள். வெறும் தண்ணீரில் என்று வேதம் சொல்லுகிறதினாலே பணம் காசு ஒன்றும் செலவில்லாமல் எந்த மனுஷனும் இக்கட்டளைக்கு கீழ்ப்படியலாமே, எனவே இருதயமே இதற்குக் காரணம் “நீர் என் இருதயத்தை விசாலமாக்கும் போது நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்” (சங்-119:32).


D.அது தேவனோடு செய்யும் உடன்படிக்கை 

( 1பேதுரு-3:21)


நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை என்று இவ்விடத்தில் ஞானஸ்நானத்தை குறித்து வாசிக்கிறோம். இது ஒரு உடன்படிக்கை என்றால் இரண்டு பேர் அவசியம். வேதத்தில் வாசிக்கும் உடன்படிக்கைகளை நாம் கூர்ந்து கவனிக்குங்கால் தேவனும் மனிதனும் செய்த எல்லா உடன்படிக்கைகளிலும் தேவன் ஒரு போதும் உடன்படிக்கையை மீறவே இல்லை. எல்லா சமயங்களிலும் மனிதனே அப்படி மீறினதைப் பார்க்கிறோம். உடன்படிக்கை எதற்கு? இதில் சம்பந்தப்பட்ட இருதரத்தாரும் இதற்கு உண்மையாயிருப்பேன் என்று உடன்படுவதற்கென்றுதானே! எனவே தேவன் ஞானஸ்நானத்தில் அவருடைய வசனத்திற்கு கீழ்ப்படிகிற மகனுக்கோ, மகளுக்கோ தமது வாக்குத்தத்தத்தில் எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். எனவே இந்த உடன்படிக்கையில் நாமும் பொறுப்புள்ளவர்களாய் கடைபிடிக்க எதிர்பார்க்கப்படகிறோம்.

ஞானஸ்நானத்தில் அவரோடே கூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் (கொலோ-2:12) 

உலகத்தில் பல மதக் கர்த்தாக்கள் உபதேசித்து கடைசியில் மரித்துப் போய் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். அவர்களது கல்லறைகள் இன்றும் உலகத்தில் பல இடங்களில் உண்டு. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஒன்று மட்டும் இன்றும் காலியாக உள்ளது. அவர் அடக்கம் பண்ணப்பட்டு உயிரோடே எழுந்தார். ஒரு விசுவாசி ஞானஸ்நானத்தின் மூலம் இப்படி அடக்கம் பண்ணப்படும் போது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டு அவர் உயிர்த்தெழுந்த கல்லறையிலிருந்து வெளி வந்தது போல இப்படி ஞானஸ்நானம் பெறும் தானும் கிறிஸ்துவோடு கூட அடக்கம் பண்ணப்பட்டு புதிதான ஜீவன் உள்ளவராய் எழும்புகிறான் (ரோமர்-6:4)

 இயேசுவின் சிலுவையில் மரணத்தினால் நமக்கு இரட்சிப்பு உண்டாவது மாத்திரம் அல்லாமல் அவரது உயிர்த்தெழுதலினாலும் நமக்கு இரட்சிப்பு உண்டாகிறது. இப்படி ஞானஸ்நானத்தினால் உமது இரட்சிப்பு பூரணப்படுகிறது. (1பேது-3:21, பிலி-2:12).


குழந்தை ஞானஸ்நானம்: 


குழந்தை ஞானஸ்நானத்தை குறித்து வேதாகமத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. இயேசு எட்டாம் நாளில் விருத்தசேதம் பண்ணப்பட்டார் என்று தான் சொல்லப்படுகிறது ஆனால்

குழந்தை ஞானஸ்நானத்தை குறித்து எந்த ஒரு ஆதாரமும் வேதாகமத்தில் இல்லை.


1. இயேசு குழந்தைகள் ஞானஸ்நானம் பற்றி எதுவும் சொல்லவில்லை.


2. இயேசுவினிடத்தில் குழந்தைகளை ஆசீர்வதிக்கத் தான் கொண்டு வந்தார்கள். அவர்களை இயேசு கரங்களினால் தொட்டு ஆசீர்வதித்தாரே ஒழிய ஞானஸ்நானம் கொடுக்க வில்லை. 


3. பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று இயேசு சொன்னார். சிறுப்பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுக்காமல் ஒரு வேளை நன்மை தீமை அறிகிற வயதிற்கு முன்பாகவே மரித்தப் போனால் அவர்கள் நிச்சயமாக பரலோகத்திற்கு போவார்கள்.


4.குழந்தைகள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றால் கீழ் கண்ட நிபந்தனைகள் அவசியம்.


i. அந்த குழந்தைக்கு ஞானம் 

வந்த பிறகு எடுப்பதுதான் ஞானஸ்நானம்.


 ii. அந்த குழந்தை வசனத்தை அறிந்து, அதை உபயோகப்படுத்த அறிந்திருக்க வேண்டும்,


 iii. விசுவாசிக்க வேண்டும்,


 iv. மனந்திரும்ப வேண்டும். 


இவைகளை எல்லாம் ஒரு குழந்தை செய்யமுடியாது ஆகவே குழந்தை ஞானஸ்நானம் செல்லாது. வேதம் குழந்தை பிரதிஷ்டையை தான் போதிக்கிறது. 

குழந்தைகள் ஞானஸ்நானம் 

பற்றி போதிக்கவில்லை.


ஞானம் வந்த பிறகு எடுப்பது தான் ஞானஸ்நானம். ஆகவே

குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

ஞானஸ்நானம் என்பது விருத்தசேதனத்திற்கு ஒப்பாயிருக்கிறது (ஆதி 17:11-14-ன் படி) என்று சிலர் சொல்லுகிறார்கள்.

ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

காரணம் (ரோ 2:29, கொ 2:11-ல்) விருத்தசேதம் இரட்சிப்புக்கு ஏற்றவிதமாக தான் வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிறது.


இந்நாட்களில் சில சபைகள் குழந்தைகள் மேல் தண்ணீர் தெளித்து திருமுழுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் சரித்திரத்தைப்

புரட்டிப்பார்க்கையில் …

குழந்தை ஞானஸ்நானம் என்பது இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகே ஏறப்பட்டது என அறிகிறோம். அக்காலத்தில் வாழ்ந்த தெர்த்துல்லியன் என்கிற சபைபிதா கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை எதிர்த்து குழந்தை ஞானஸ்நானம் தவறு என்று சுட்டிக்காட்டினார். இயேசுகிறிஸ்து சிறுவயதில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். (லுக் 2:23-24) ஆனால் வளர்ந்தபின்பே ஞானஸ்நானம் பெற்றார்

 (லுக் 3:21-23)


ஞானஸ்நானம் எங்கு பெற வேண்டும்?


  • மிகுந்த தண்ணீருள்ளஇடத்தில் பெறவேண்டும் (யோவா3:23)

  •  தண்ணீரில் இறங்கி பெற வேண்டும் (அப் 8:38,39 - மத் 28 :28,19)

 இந்த வசனங்கள் மூலம் ஆதிசபை விசுவாசிகள் தண்ணீரில் இறங்கி, முழுகிப்பெற்றார்கள் என்பதைத் திட்டமாக அறிந்துகொள்ளலாம்.


ஞானஸ்நானம் எப்போது பெற வேண்டும்?


இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தாமதம் பண்ணாமல் ஞானஸ்நானம் பெற வேண்டும் (அப் 22:16)


ஞானஸ்நானம் பெறும் போது...


  • பரலோகம் மகிழ்கிறது.

 (லுக் 3:22) 


  • ஜீவப்புஸ்தகத்தில் பேரெழுதப்படுகிறது. (வெளி 21:27) 


  • கர்த்தருடைய பந்திக்கு தகுதிப்படுத்துகிறது (1கொரி 11:25)


  • பரலோகராஜ்யத்திற்கு ஆயத்தப்படுத்துகிறது.

(யோவா 3:3) 


  • பொல்லாங்கன் தொடான் (1யோவா 5:18)


  • பாவத்திற்கு நீங்கி விடுதலை ஆக்கப்படுகிறோம் (ரோம6:7) 


  • தேவனுக்கென்று பிழைத்திருக்கிறோம் 

(ரோம 6:10)


புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் ஞானஸ்நானம் எடுத்ததற்கு ஆதாரம்


1. அப் 8:36,37 -  பிலிப்பு கந்தாகே மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்த விவரம் “இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள் பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.''


2. எருசலேமில் உள்ள சபையில் 3000 பேர்கள் ஒரே நாளில் ஞானஸ்நானம் எடுத்து சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

( அப் 2 : 41)


3. சமாரியாவில் உள்ள சபையில் உள்ள விசுவாசிகள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

( அப் 8:12)


4. செசரியா சபையில் உள்ளவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள் (கொர்நெலியு வீட்டார்) -அப் 10:48


5. பிலிப்பிய சபையார் ஞானஸ்நானம் எடுத்தார்கள். (லிதீயாள் சிறைசாலைதலைவன்) அப் 16:15,33


6. கொரிந்து சபையார் ஞானஸ்நானம் எடுத்தார்கள்

( அப் 18:8)


7. எபேசு சபையார் ஞானஸ்நானம் எடுத்தார்கள் -(அப் 19:1-5)


8. கலாத்திய சபையில் ஞானஸ்நானம் எடுத்தார்கள்

( கலா 3:27)


9. கொலேசெயர் சபையில் ஞானஸ்நானம் எடுத்தார்கள்

( கொ 2:12)


10. ரோம் சபையில் ஞானஸ்நானம் எடுத்தார்கள் ரோ 6:1-4


ஞானஸ்நானம் எடுப்பதற்கு நிபந்தனைகள்:


1. இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து நமக்காக உயிரோடு கூட எழுந்தார் என்று விசுவாசிக்க வேண்டும்.

 (ரோ 10:9-10)


2. பாவத்தை விட்டு மனந்திரும்ப வேண்டும். (லூக் 24.7 அப் 2:8)


3. ஏற்கெனவே இரட்சிக்கப்ட்டு பாவமன்னிபின் நிச்சயத்தை பெற்றவர்களுக்கு தான்


 4. (யோவான் 3:5) படி ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவர்களுக்கு தான். 'ஜலம்" என்பது தேவ வசனத்தை குறிக்கிறது,ஆவிஎன்பது ஆவியானாவரை குறிக்கிறது. ஆவியானவர் மனிதன் கேட்ட வசனத்தை அவனுக்குள் உணர்த்தி, அவனை மறுபடியும் பிறக்க செய்கிறார். (மறுபிறப்பு அடைந்தவர்களுக்கு தான்)


5. இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறவர்களுக்கு தான். (அப் 8:37)


ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.


 1. இரட்சிப்பின் திட்டத்தில் ஞானஸ்நானம் இருக்கிறது. 

(மாற்கு 16:16)


2. ஞானஸ்நானம் எடுத்தால் தான் இரட்சிப்பு பூரணமடைகிறது. 

(1 பேதுரு 3:21, அப் 10:6,48, 

மாற்கு 16:16)


3. பாவ மன்னிப்புக்காக ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (அப் 2:38.)


4. ஞானஸ்நானம் எடுத்தால் தான் சபைக்குள்ளே அங்கமாக முடியும் (கலா3:27, 1கொரி 12:13,அப் 2:47). 


யாரிடத்தில் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 


  • ஞானஸ்நானம் கொடுக்கிறவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். (லூக் 1:15)


  • பழைய ஏற்பாட்டில் ஊழியர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டு இருந்தார்கள். (யாத் 30:30)


  • அப்போலோ என்பவன் அபிஷேகம் பெறாதவனாக எபேசுவில் உள்ளவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துவந்தான். அப்போலோ கொடுத்த ஞானஸ்நானத்தை திரும்பவும் அபிஷேகம் பெற்ற பவுல் கொடுக்கிறார் என்று பார்க்கிறோம். ஆகவே ஞானஸ்நானம் என்பது அபிஷேகம் பெற்ற ஊழியர்களுடைய கையிலே எடுக்க வேண்டும்.

 (அப் 19:1-5)


ஞானஸ்நானத்தின் ஒழுங்கு:


 பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (மத் 28:19)


யோவான் கொடுத்த ஞானஸ்நானம் என்ன?


அப் 19:1-7 ஐ வாசிக்கவும். மேற்கண்ட பகுதியை நாம் வாசிக்கும் போது எபேசு பட்டணத்திற்கு வந்த பவுல் அங்கிருக்கிற விசுவாசிகளை பார்த்து, நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றீர்களா? என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் பரிசுத்த ஆவி உண்டு என்பதை நாங்கள்

கேள்விப்பட்டதில்லையே என்று சொல்லுகிறார்கள். பிறகு பவுல் அவர்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் மாத்திரம் அறிந்திருக்கிறார்கள் என்று திரும்பவும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார். அப்படியானால் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் என்ன என்று பார்ப்போம்,


யோவான் ஞானஸ்நானம் கொடுப்பதற்காகவே தேவனால் அனுப்பப்பட்டு வந்தவன். யோவான்மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் கொடுக்க வந்தான். ஜனங்களை மனந்திரும்புகிற சத்தியத்திற்குள் மாத்திரம்

 வழி நடத்த தேவனால் அனுப்பப்பட்டவன்.


ஆனால்யோவான் ஞானஸ்நானத்தில் இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்தெழுதல் ஆகிய சம்பவத்திற்கு ஒரு இனையை காண முடியாது. அது ஒரு ஆயத்தமாக தான் இருந்தது. ஆகவே அந்த ஞானஸ்நானம் பூரண அனுபவத்துக்குள் நம்மை வழி நடத்தாது.


யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தில் ஒரு விசுவாசி இயேசுவினுடைய மரணம் அடக்கம் உயிர்தெழுதல் ஆகியவற்றில் தனக்கும் பங்கு உண்டு என்பதை உணர முடியாது. யோவான் ஸ்நானகன் இயேசுவை பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர் என்று சொல்லிருந்தாலும் இன்னும் சிலுவையோ உயிர்தெலுதலையோ பெந்தோகொஸ்தே நாளையோ அவன் அறிந்ததில்லை. ஆகவே யோவான் கொடுத்த ஞானஸ்நானம் மனம் திரும்புதலுக்குக்கேற்ற ஞானஸ்நானமாய் மாத்திரமாய் இருந்தது. 

யோவான் சதுசேயர்கள் பரிசேயர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து முடித்த பிற்பாடு உடனடியாக அவர்களுடைய வாழ்க்கை மாற வேண்டும், மனம் திரும்ப வேண்டும் என்று எதிர்ப்பார்தார். ஆனால் அது கூடாதகாரியம். ஏனென்றால் இயேசு மரித்து உயிர்தெழுந்த பிற்பாடுதான் ஒரு கிறிஸ்தவன் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். அதற்கு முன்பதாகவே யோவான் அவர்களிடத்தில் எதிர்ப்பார்தார். ஆகவே தான் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பூரணமான ஞானஸ்நானம் அல்ல. ஆகவே யோவான் ஞானஸ்நானம் என்பது இயேசு முதலாம் வருகைக்கு அப்போது இருந்த யூத மக்களை ஆயத்தப்படுத்தவதற்கு ஏதுவாக மாத்திரம் இருந்தது. 


விசுவாசிகளின் ஞானஸ்நானம் அல்லது புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நானம்


தண்ணீர் ஞானஸ்நானம் என்பது ஏற்கனவே ஒரு விசுவாசிக்குள் ஏற்பட்டிருக்கிற ஒரு மனம்

திரும்புதழுக்கு அத்தாட்சியாக கொடுக்கப்படுகிறது. ஞானஸ்நானம் என்பது ஒரு சடங்காசாரம் அல்ல. ஆனால் இரட்சிக்கப்பட்டதற்காக எடுப்பது தான் ஞானஸ்நானம். உள்ளத்தாலே எவ்விதமான மாறுதலும் இல்லாமல் ஞானஸ்நானம் எடுப்போம் என்றால் அது ஒரு செத்த சடங்காசாரமாகவே அமைந்துவிடும்.


ஞானஸ்நானம் எதை பிரதிபலிக்கிறது


ரோமர் 6- 1 முதல் 11 வரை வாசிக்கவும் ஞானஸ்நானம் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய மரணம் அடக்கம் உயிர்தெழுதலுக்கு ஒப்பனையாய் இருக்கிறது. நாமும் இயேசுவோடே மரித்து அடக்கம் பன்னப்பட்டு உயிர்தெழுந்திருக்கிறோம் என்கிறதான ஒரு உணர்வு நமக்கு உண்டாக வேண்டும் என்பதற்க்காகவே ஞானஸ்நானம்.

ஒருவன் ஞானஸ்நானம் எடுக்கும்பொழுது அவனை தண்ணீரில் சில வினாடிகள் அடக்கம் பண்ணுகிறார்கள்.


Step one: இயேசுவோடு ஒரு விசுவாசி மரிக்க வேண்டும். இன்னனொரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் பழைய மனிதன் பழைய சுபாவம் மாம்சீக வாழ்க்கை மரிக்க வேண்டும். பழைய வாழக்கைக்கு நாம் சாக வேண்டும். அது தான் மரணம்


Step two: பழைய மனிதனுடைய சரீரம் தண்ணீரில் மூழ்கும் பொழுது (கொலோசெயர் 2:12) -ன் படி பழைய மனிதன் தண்ணீரில் அடக்கம்பன்னப்படுகிறான். ஞானஸ்நானம் என்பது அடக்க ஆராதனை தண்ணீர் தான் கல்லறையாய் இருக்கிறது.


Step three: தண்ணீரிலிருந்து வெளியே வரும்பொழுது இயேசு எப்படி கல்லறையிலிருந்து வெளியே வந்தாரோ அதே போல ஒரு புதிய வல்லமை தனக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று உணர்வோடு வெளியே வருகிறான்.


 ஞானஸ்நானம் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய

அடக்கம் உயிர்தெழுதலினால் என்ன கிடைத்தது என்பதை உணரக்கூடிய ஒரு நிகழ்ச்சி தான். இந்த ஞானஸ்னஸ்நானத்தின் மூலமாக நான் இயேசுவோடு கூட மரிக்கிறேன் அடக்கம் பன்னப்படுகிறேன். உயிரோடு கூட எழுப்பபடுகிறேன். இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு கூட எழுந்த பிற்ப்பாடு மரிக்கவில்லை. அதே போல மீண்டும் பழைய வாழ்க்கையில் போய்விடக்கூடாது.


1. ஞானஸ்நானம் எடுத்த பிற்பாடு ஒருவன் இயேசுவை தரித்துக் கொள்கிறான். (கலாத்தியர் 3:27)


2. ஞானஸ்நானம் எடுத்த பிற்பாடு தான் சோதனை ஆரம்பமாகிறது (மத் 4:1). ஆனால் அதே சமயம் சோதனைகளை ஜெயிக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.


ஞானஸ்நானம் நமக்குள் என்ன செய்கிறது

( 1 பேதுரு 3 : 21)

ஞானஸ்நானம் என்பது ஏதோ வெளியே இருக்கிற சரீரத்தினுடைய அழுக்கை போக்குவது அல்ல. ஆனால் நம்முடைய மனச்சாட்சியை சுத்தப்படுகிறது. (Guilt) குற்றமுள்ள மனசாட்சியை கழுவிவிடுகிறது. 


ஏன் இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்தார்:


பழைய ஏற்பாட்டிலே மோசேகுள்ளாக எல்லாரும் சிவந்த சமுத்திரத்தின் வழியாக ஞானஸ்நானம் எடுத்ததாக பார்க்கிறோம். (1 கொரி 10:2) 


இயேசு நம்மெல்லாருக்கும் முன்மாதிரி வைத்து போகும்படியாக 

பாவமில்லாதவராக இருந்தும் அவர் ஞானஸ்நானம்

 எடுத்தார். நமக்கு மாதிரியை வைத்து போயிருக்கிறார்.

 (1 பேதுரு 2:21)


1. தேவனுடைய நீதி நிறைவேறுவதற்காக

 (மத்தேயு 3:15) அதாவது (கலாத்தியர் 4:4.5) ன் படி இயேசு இந்த உலகத்திலே மனிதனாய்

வந்து நியாயபிராமாணத்தின்படி வாழ வேண்டும். ஆகவே நியாயப்பிராமாணத்தின் படி அதை நிறைவேற்ற வேண்டியதாக காணப்பட்டது. பழையேற்பாட்டிலே ஞானஸ்நானம் என்பது ஒரு நிழலாய் மாத்திரம் இருந்தது. இன்றைக்கு அநேகர் ஞானஸ்நான சத்தியத்தைத் தள்ளி போடுகிறார்கள். 

அது தேவனுடைய ஆலோசனையை தள்ளிப்

போடுகிறதுக்கு சமமாயிருக்கிறது. (லூக் 7:30). 

இயேசுவே ஞானஸ்நானம் எடுத்த படியால் சாக்கு போக்கு சொல்லாதபடி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.


ஞானஸ்நானம் எடுத்த பிற்பாடு என்ன செய்யவேண்டும்?


1. சபையிலே அங்கமாக இருக்கவேண்டும்.


2. சீஷனுடைய உபதேத்தை கேட்டு அதன்படி நடக்க ஒப்புக்கொடுக்க வேண்டும்.


3. சபையில் திருவிருந்தில் பங்கெடுக்க வேண்டும்


4. தனக்கு கிடைக்கிற சம்பாதியத்தில் பத்தில் ஒரு பங்கை தேவனுடைய ஆலயத்தில் வந்து கொடுக்க வேண்டும்.


5. பரிசுத்தமாய் வாழ வேண்டும். 


6. சபையிலிருக்கிற எல்லா விசுவாசிகளோடும் ஐக்கியமாய் இருக்க வேண்டும்.


 7. நம்முடைய மாம்சத்தில் உயிர் இருக்கிறவறைக்கும் தான் பிசாசு மாம்சத்தோடுகூட போராடுவான். அந்த பாவ சோதனையை இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையோடு கூட கூட போராடி மேற்கொள்ள வேண்டும்.


8.ஞானஸ்நானத்திற்கு பிற்பாடு என்ன சோதனை வந்தாலும் கடைசிவரைக்கும் இயேசுவை உண்மையாக பின்பற்ற வேண்டும். 


போதகர் கவனத்திற்கு

ஞானஸ்நானம் எடுப்பவர்களை ஆயத்தப்படுத்தல்

 ( மத் 3:13-17)


1. ஞானஸ்நானம் என்பது மதமாற்றத்திற்குரிய சடங்கோ, திருச்சபையில் சேருவதற்கான ஒன்றோ, என்ற எண்ணம் இராதபடி அது தேவனோடு செய்து கொள்ளும் உடன்படிக்கை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.


2. பாரம்பரிய கிறிஸ்துவ

 குடும்பத்திற்கு உட்பட்டவராக இருப்பின், பொதுவாக மூன்றிலிருந்து ஆறுமாத காலம் வரை சபைக் கூடுதல்களில் அவரைக் கலந்துகொள்ளச் செய்து அவருக்குள் ஏற்படுகிற மாற்றத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்.


 3. அவருடைய இரட்சிப்பை உறுதிசெய்து கொண்டபிறகே ஞானஸ்நானத்திற்கு ஒழுங்குசெய்ய வேண்டும்.


4. 12 வயதுக்கு கீழே கொடுக்காமல் இருப்பது நல்லது


5. புதிய நபராக இருப்பின் 18 வயதிற்கு மேல் இருப்பது நல்லது.




Post a Comment

0 Comments