செப்னா தண்டிக்கப்பட காரணம் - ஒரு ஆய்வு

 ஒரு ஆய்வு


செப்னா தண்டிக்கப்பட காரணம்    


(ஏசாயா 22:15-19)


செப்னா யூதராஜாவின் அரண்மனையில்

விசாரிப்புக்காரனாயும், 

பொக்கிஷகாரனாயுமிருக்கிறான். இவன் அரண்மனையிலே உயர்பதவி இருக்கிறவன்.

கர்த்தர் செப்னாவை இவனுடைய

ஸ்தானத்திலிருந்து தள்ளிவிட்டு, இவனுக்குப்

பதிலாக எலியாக்கீம் என்பவரை

வைக்கிறார். 

கர்த்தர் தம்முடைய சித்தத்தின்

பிரகாரமாய் ராஜாக்களை அவர்களுடைய

சிங்காசனத்தில் அமர செய்கிறார்.

அதுபோலவே தம்முடைய விருப்பத்தின்

பிரகாரம் கர்த்தர் ராஜாக்களை

அவர்களுடைய சிங்காசனத்திலிருந்து

நீக்கியும் விடுகிறார்.


அரண்மனையிலே உயர்பதவியிலிருக்கிறவர்கள் நற்குணமும், ஒழுக்கமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கர்த்தருக்குப் பயந்து ஆளுகை செய்ய வேண்டும். கர்த்தருடைய விருப்பம் அவர்களுடைய விருப்பமாயும், கர்த்தருடைய சித்தமே அவர்களுடைய

சித்தமாயும் இருக்க வேண்டும் கர்த்தருடைய

வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிந்து,

உண்மையாய் வேலை செய்ய வேண்டும்.


எருசலேமுக்கு விரோதமாய் அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப் தன் சேனையோடு வருகிறான். நகரத்தை முற்றிக்கை போட்டிருக்கிறேன். 

அவன் வருவதற்கு

முன்பாக எருசலேமுக்கு நடைபெறப்போகும் காரியங்களை ஏசாயா தீர்க்கதரிசனமாய்ச்

சொல்லுகிறார். 

அவையெல்லாம் ஒவ்வொன்றாய்

நிறைவேறுகிறது.


ஏசாயா செப்னாவைப்பற்றித்

தீர்க்கதரிசனம் சொல்லும் போது, அவன் அரண்மனையிலே விசாரிப்புக்காரனாயும்,

பொக்கிஷக்காரனாயும் இருக்கிறான்.

இவனுடைய ஸ்தானத்திற்கு இல்க்கியாவின்

குமாரனாகிய எலியாக்கீம் உயர்த்தப்படுகிறான்.

செப்னாவோ தன்னுடைய பதவிகளை இழந்து, இப்போது சம்பிரதியாகப் பணிபுரிகிறான்.


"அப்பொழுது இலக்கியாவின்

குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனைவிசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய

யோவாக் என்னும் கணக்கனும்

அவனிடத்திற்குப் புறப்பட்டுப் போனார்கள்

(ஏசா 36:3)


அரண்மனையின் வரவு செலவு கணக்குகள்

எல்லாவற்றையும் செப்னா பார்த்து வருகிறான். இவனிடத்தில் மிகப்பெரிய பொறுப்பு நம்பிக்கையோடு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இவன் அரண்மனை முழுவதையும் விசாரிக்கிறவர்.

அரண்மனையில் எல்லா காரியங்களும்

இவனுடைய ஆளுகையின் 

கீழ் இருக்கிறது.

ஆனால் இவனோ தன்னுடைய ராஜாவுக்கும்,

தன்னுடைய தேசத்திற்கும்

உண்மையில்லாதவனாய் இருக்கிறான்.


யூதருடைய பாரம்பரியத்தின் பிரகாரம் செப்னா யூத தேசத்திற்கு துரோகம் செய்தவன்

என்று சொல்லுகிறார்கள். அசீரியாவின் ராஜாவோடு சேர்ந்து இவன் யூததேசத்திற்கு விரோதமாய் சதி ஆலோசனை

பண்ணினான். அசீரியாவின் ராஜா

எருசலேமைப் பிடித்து, அதை செப்னாவின் கையில் ஒப்புக்கொடுக்கும் வண்ணமாக

இவர்கள் இருவருக்கும் இடையே

ஒரு இரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும்

யூதருடைய சரித்திரம் சொல்லுகிறது.


செப்னா பெருமை மிக்கவன். அவன் ஒரு மாயக்காரன்

ஐசுவரியவான்கள்,

பிரபுக்களும் உயர்ந்த ஸ்தலத்திலே தங்கள் கல்லறையை வெட்டுவார்கள். கன்மலையிலே தங்களுக்கு வாசஸ்தலத்தைக் கட்டுவார்கள். 

செப்னாவோ சாதாரண வேலை பார்த்தாலும், அவன் தகாத வழியில் தனக்கு ஐசுவரியத்தை சேகரித்திருக்கிறான். பிரபுக்களைப்போல கன்மலையிலே தனக்கு மிகப்பெரிய அரண்மனையைக் கட்டுகிறான்.


கர்த்தருடைய வார்த்தை செப்னாவுக்கு

விரோதமாய் வருகிறது.

 "நீ உனக்கு இங்கே

கல்லறையை வெட்டும்படிக்கு, உனக்கு இங்கே

என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார்

இருக்கிறார்கள் என்று கர்த்தர் செப்னாவிடம்

கேட்கிறார் 

செப்னா தன்னுடைய வாசஸ்தலத்தை கன்மலையில் தோண்டுகிறான். தன்னுடைய மாளிகைக்கு உறுதியான அஸ்திபாரம் போடுகிறான். கர்த்தரோ இவனுக்கு விரோதமாக இருக்கிறார்.

 கர்த்தர் செப்னாவை அவனுடைய

நிலை விட்டு துரத்தி விட்டார். அவனை அவனுடைய ஸ்தானத்திலிருந்து பிடுங்கிப்போடுவார். 

செப்னா உயிரோடிருக்கும்போது பிரபுக்களைப்போல

மாளிகையில் வாசம் பண்ண வேண்டும் என்று விரும்புகிறான். அதற்காக கன்மலையிலே தனக்கு

வாசஸ்தலத்தைக் கட்டுகிறான். தான் மரித்த

பின்பும் தேசத்திலே தன்னுடைய பெயர் விளங்க வேண்டும் என்று ஆசை படுகிறான்.

இதற்காக செப்னா உயர்ந்த ஸ்தலத்திலே

தன் கல்லறையை வெட்டுகிறான். கர்த்தரோ

அவனுடைய மகிமையை நீக்கிப்போடுவார்.

கர்த்தர் செப்னாவுக்கு விரோதமான

வார்த்தைகளைச் சொல்லுகிறார்.


செப்னா உயர்ந்த ஸ்தலத்திலே தன்

கல்லறையை வெட்டுகிறான். உயர்ந்த ஸ்தலங்கள் எப்போதுமே வழுக்குகிற ஸ்தலங்களாகத்தான் இருக்கும். 

உயர்ந்தஸ்தலங்களில் நாம் உறுதியாய் நிற்கவேண்டும்.

உயரத்திலிருந்து கீழே விழும்போது காயமும் சேதமும் அதிகமாயிருக்கும். 

செப்னா தன்னுடைய ஸ்தானத்திலிருந்து உயர்ந்த

ஸ்தலத்திற்கு ஏறுகிறான். கர்த்தரோ அங்கிருந்து அவனைத் துரத்தி விடுகிறார்.

அவனுடைய ஸ்தானத்திலிருந்து அவனைப் பிடுங்கிப்போடுவார் 


கர்த்தர் செப்னாவைப்பற்றிச்

சொல்லும்போது

 "உறுதியான இடத்தில் கடாவப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்து விழும்; அப்பொழுது

அதின்மேல் தொங்கின பானம் அறுந்து விழும்"

(ஏசா 22:25) என்று சொல்லுகிறார். 


செப்னா தன்னை உறுதியான இடத்தில் கடாவப்பட்டிருக்கிற ஆணியைப்போல

நினைத்துக் கொண்டிருக்கிறேன். தான் அசைக்கப்படுவதில்லை என்று தனக்குள்ளே

பெருமை படுகிறான். ஆனால் கர்த்தரோ அவனுடைய நிலையிலிருந்து அவனைத்

தூரத்தி விடுவார். யூதேயா தேசத்திலிருந்தே

அவன் துரத்தப்பட்டான்.



கா்த்தா் பெலவான் ஒருவனை தூத்துகிற வண்ணமாக சொப்னாவை தூத்திவிடுவார்

அவனை நிச்சயமாய் மூடிப்போடுவார். அசீரியர்கள் செப்னாவை கைதுபண்ணினார்கள் என்றும், அவனை தங்கள் தேசத்திற்கு

சிறைப்பிடித்து கொண்டுபோனார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். எசேக்கியா ராஜா செப்னாவின் 

துரோகத்தைக் கண்டுபிடித்து அவனைத்தண்டித்தான்

என்றும் வேறு சிலர் சொல்லுகிறார்கள்.


செப்னாவுக்கு குஷ்டரோகம் பிடித்தது என்றும்

ஒரு வரலாறு சொல்லுகிறது யூததேசத்திலே குஷ்டரோகியாயிருக்கிறவன் நகரத்திற்கு புறம்பே தள்ளப்படுவார். குஷ்டரோகம் கர்த்தர் கொடுக்கும்

தண்டனை இருதயத்தில்பெருமையும்

அகந்தையுமுள்ளவர்களை கர்த்தர்

குஷ்டரோகத்தினால் தண்டிப்பார்.


செப்னாவுக்கு குஷ்டரோகம் வந்தது.

கர்த்தர் அவனை உண்டையைப்போல

அகலமும் விசாலமுமான தேசத்திலே சுற்றி

எரிந்துவிடுகிறார். தேசம் விசாலமுமாயிருக்கிறது.

நகரம் சிறியதாக இருக்கிறது. குஷ்டரோகி நகரத்திற்குள் இருக்க முடியாது. அவன்விசாலமான நாட்டுப்புறங்களில் சுற்றி

அலைய வேண்டும். 

செப்னா நகரத்தில்

இருக்க முடியாமல் நகரத்திற்கு புறம்பேயுள்ள

அகலமும் விசாலமான தேசத்திலே சுற்றி அலைகிறான். அவனால் மறுபடியும் நகரத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை, செப்னா நகரத்திற்குப் புறம்பே செத்துப் போகிறான்.


செப்னா அரமனை விசாரிப்புக்காரனாகவும்

பொக்கிஷகாரனாகவும் இருந்த போது,அவனிடத்தில் திரளான ஐசுவரியம் இருந்தது.

தன்னுடைய மகிமைக்காக ஏராளமான இரதங்களைச் செய்தான். ஆனால்

இப்போதோ அவனுடைய மகிமையின் இரதங்கள், அவனுடைய ஆண்டவனாகிய

ஆகாசுக்கு இகழ்ச்சியாயிருக்கிறது.

புகழ்ச்சியாயிருக்க வேண்டியது இப்போது இகழ்ச்சியாயிருக்கிறது. கர்த்தர் ஒருவனைத் தண்டிக்கும்போது அவனுடைய

புகழ்ச்சி நீங்கும் அவனுக்கு இகழ்ச்சி உண்டாகும்……







Post a Comment

0 Comments