கானான் தேசமும் அதன் 70 அடைமொழிகளும் - ஒரு ஆய்வு

 கானான் தேசமும் அதன்  70 அடைமொழிகளும்


ஒரு ஆய்வு


 பெலிஸ்தியரின் தேசமாகிய கானான் தேசம் (செப்பனியா 2:5)


பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டு போய் சேர்க்க இறங்கினேன் யாத்திராகமம் 3:8


ஆம் அது பாலும் தேனும் ஓடுகிற தேசம் தான். பாலும் தேனும் ஓடுவதென்றால் அது அதிக செழிப்பை காட்டுகிறது. கர்த்தரின் கட்டளைப்படி கானான் தேசத்தை வேவு பார்க்க தீர்க்கதரிசியாகிய மோசே 12 பேரை தேர்ந்தெடுத்து அனுப்பினார். 


கிறிஸ்துவுக்கு முன் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கானான் தேசத்தை சுற்றிப் பார்த்து வந்தவர்கள் கொண்டு வந்த செய்தி தான் மேலே கூறப்பட்டுள்ளது. அங்குள்ள திராட்சை குலையைக் கொண்டு வந்து காட்டி யோசுவாவும், காலேப்பும் ஆச்சரியப்பட்டு ஆனந்தமாய் சொன்னார்கள்.

 “அது பாலும் தேனும் ஓடும் தேசந்தான். இது அதன் கனி”.(எண். 13:27) ஆம் உண்மையிலேயே அது பாலும் தேனும் ஓடும் தேசந்தான்.


வேதாகமத்தில் கானான் தேசத்தைப் பற்றிய பல அடைமொழிகளை பாா்கலாம். கானான் தேசம் என்றும் அது பாலும் தேனும் ஓடும் தேசம்

 (எசேக் 20:6) என்றும்,

 சுமார் 70 அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் அந்த தேசம் எத்தனை செழிப்புள்ளதாக இருந்திருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள். ஆம் தேவன் அன்புள்ளவர், 

தன்  ஜனங்களுக்கு எந்த செழிப்பான தேசத்தைக் கொடுக்கலாம் என்று தேடிப் தேடிப் பார்த்து கானான் தேசத்தை கொடுத்தாராம். அதனால் தான் “நான் பார்த்து வைத்த தேசம்” என்று சொல்கிறார். (எசேக் 20:6)



ஆம். அது பாலும் தேனும் ஓடும் தேசம் தான். அது செழிப்புள்ள தேசம் தான்.


கானான் தேசம்


கானான் தேசம் என்பது இப்போதும் இருக்கிறதா? என்பது இன்று பலருடைய கேள்விக் குறி. ஆம், கானான் தேசம் இன்றும் இருக்கிறது. 

கானான் தேசத்தின் புதுப் பெயர் தான் பாலஸ்தீன தேசம்.

 உலக ஆரம்ப காலத்தில் நோவாவின் மகன் காம்; பேரன் கானான்; கானான் வழியில் வந்தவர்கள் கானானியர்கள். 

அந்த கானானியர்களில் ஏழு பலத்த ஜாதிகள் இந்த கானான் தேசத்தில் வாழ்ந்து வந்தனர். 

அந்த ஜாதியின் கர்வமும், ஆகாரத் திரட்சியும். நிர்விசாரமும், ஆண்புணர்ச்சி போன்ற அக்கிரமங்கள் (எசேக் 16:49) 


ஆண்டவர் சந்நிதானத்தில் வந்து எட்டவே, கர்த்தர் குளவிகளை அனுப்பி (யாத்தி 23:28) 

அவர்களை துரத்து துரத்து என்று துரத்திவிட்டு, அங்கே இஸ்ரவேல் மக்களை குடியேற்றி வைத்தார். இவ்வாறு கானான் தேசம் இஸ்ரவேல் தேசமாக மாறியது.


பாலஸ்தீனா தேசம் (பெலிஸ்தரின் தேசம்)


இஸ்ரவேல் மக்களோ அதற்கு மேலாக முரட்டு குணமும், வணங்கா கழுத்தும், அந்நிய தெய்வ வணக்கம், அந்நிய பெண்கள் மீது ஆசை, தீர்க்கதரிசிகளை கொல்லுதல் போன்ற பல அக்கிரமங்கள் செய்து கெட்டுப் போனதால், கர்த்தர் கோபப்பட்டு எதிரிகளை அனுப்பி அவர்களைத் துரத்து துரத்து என்று துரத்தி விடவே,

 அரபியர்களும் பெலிஸ்தியர்களும் மீண்டும் குடி புகுந்தனர். 

இவ்வாறு இஸ்ரவேல் தேசம் பாலஸ்தீன தேசமாக மாறியது. பெலிஸ்தரின் தேசமாகிய கானானே (செப்பனியா 2:5)

 என்று வேதம் சொல்கிறது,


இயேசு காலத்தில் கானான் தேசம் ரோம ஆதிக்கத்திலிருந்தது. கி.பி.ஏழாம் நூற்றாண்டு இஸ்லாமிய மதம் ஆரம்பமானதும், முகமதியர்கள் ஆதிக்கமாகியது. 


பின்பு துருக்கியர்கள் நுழைந்தனர். துருக்கி மன்னர் ஓட்டோமன் ஆட்சியில் சுமார் 400 ஆண்டுகள் கானான் தேசத்தை ஆண்டனர்.


இஸ்ரவேல் தேசம்


முதலாம் உலக மகா யுத்தத்திற்கு (1914-1918) பிறகு, 

1918 ல் ஆங்கிலேயர்கள் கானானை கைபற்றினர். 


இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் (1939-1945) பிறகு, 29.11.1947ல் பாலஸ்தீனா தேசத்தை ஏழு பங்கு வைத்து,

 3 பங்கு யூதர்க்கும், 3 பங்கு அரபியர்களுக்கும், ஒரு பங்கு சர்வ தேச சொத்தாகவும் பங்கிடப்பட்டது


 (யோவேல் 3:2). கர்த்தருடைய

அநாதி தீர்மானத்தின்படியும், தீர்க்கதரிசனத்தின்படியும்

 1948 மே மாதம் 14ம் தேதி இஸ்ரவேல் நாடு பிரகடனம் செய்யப்பட்டது 

(எரே 29:14) (எசேக் 11:17). 

அன்று முதல் இன்று வரை சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரவேல் மக்கள் பாலஸ்தீனரை துரத்தி தேசம் விசாலமாகி வருகிறது. 

பாலஸ்தீனா தேசம் மீண்டும் இஸ்ரவேல் தேசமாக மாறி வருகிறது.


கானானின் எல்லை


சாலொமோன் காலத்து கானான் யோசுவா 1:4 ன் படி

 வடக்கே லீபனோன்,

தெற்கே எகிப்து நதி. 

மேற்கே மத்திய தரைக்கடல், கிழக்கே ஐபிரத்து நதி. 

வடக்கே ஆமாத்தின் எல்லை தொடங்கி தெற்கே எகிப்தின் நதி மட்டும் சாலொமோன் ஆண்டு வந்தான். 

(1 இராஜா 8:65) (2 நாளா 8:4)



பைபிளில் ஏழு எழுபது


ஆறு என்றால் பூரணம்,

 ஏழு என்றால் பரிபூரணம்,

எட்டு என்றால் சம்பூரணம் என்பார்கள். அதுபோல் இந்த எழுபது அடைமொழிகள் 

பரிபூரண செழிப்பை குறிக்கிறது.


கானான் தேசத்துக்கு 70 அடைமொழிகள் 


1. அந்த நல்ல தேசம்  -(உபா 8:10)

2. அமரிக்கையான தேசம்-

( 1 நாளா 4:40)

 3. அப்பமும் திராட்சை ரசமும் உள்ள தேசம் -(2 ராஜ 18:31)

 4. அசட்டை பண்ணின தேசம்

(எண் 14:31)

 5. ஆணையிட்ட தேசம்

(எசே 20:28)

 6. ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம் (உபா 8:7 )

7. இன்பமான தேசம்

(சகரி 7:14)

 8. இரும்பும் செம்பும் மலைகளுமுள்ள தேசம் (உபா 8:9)

 9. இஸ்ரவேல் தேசம்

(எசே 20:42 )

10. இஸ்ரவேலின்

 மலைகளாகிய தேசம்-(எசே 37:22 )

11. இச்சிக்கப்படத்தக்க தேசம்

(சங் 106:24)

12. உங்கள் தேசம்

(ஏசா 36:17)

 13. உன் இனத்தார் தேசம்

(ஆதி 31:13)

 14. உடன்படி)க்கையின் தேசம்

(எசே 30:5)

 15. உம்முடைய தேசம்

(2 சாமு 7:23)

 16. என் தேசம்) (தேவனுடைய தேசம்)- (எசே 38:16)

17. எபிரெயரின் தேசம்

(ஆதி 40:15)

 18. எல்லா தேசங்களின் சிங்காரமான தேசம் -(எசே 20:6)

19. எமோரியரின் தேசம் -

(யோசு 24:8)

20. ஏத்தியரின் தேசம்

(யோசு 1:4)

21. ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசம்-(உபா 18:31 )

22. ஒலிவ மரம், எண்ணெயும் தேனுமுள்ள தேசம் (உபா 8:8)

 23. ஒன்றும் குறைவுபடாத தேசம்

(உபா 8:9)

 24. கர்த்தரின் தேசம்

(உபா 36:20)

 25. கர்த்தர் விசாரிக்கிற தேசம்

(உபா 11:11)

 26. கானான் தேசம்

(சங் 105:11)

 27. கானானியரின் தேசம்

(உபா 1:7)

 28. காணியாட்சியான தேசம்

(லேவி 14:34)

 29. குறைவில்லாத தேசம்

(நியா 18:10)

 30. கோதுமையும் வாற்கோதுமையுமுள்ள தேசம் 

(உபா 8:8 )

31. சமுத்திர கரை தேசம்

(செப் 2:6 )

32. சமாதானமுள்ள தேசம்

(எரே 12:5)

 33. சுகமுள்ள தேசம்

(1 நாளா 4:40 )

34. சுய தேசம்

(எசே 34:13)

 35. சுதந்திர தேசம்

(எசே 33:24 )

36. சுற்றிப் பார்த்து சோதித்த தேசம்

(எண் 14:7)

 37. சிறப்பான தேசம்

(சங் 47:4)

 38. சிங்காரமான தேசம்

(தானி 8:9)

 39. செழிப்பான தேசம்

(எரே 2:7)

 40. தானியமும் திராட்ச ரசமுமுள்ள தேசம்( உபா 33:28)

 41. தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கும் தேசம் (உபா 8:9 )

42. திராட்சை, அத்தி, மாதுளை உள்ள தேசம் (உபா 8:8/

 43. தூரத்திலுள்ள தேசம் -

(ஏசா 33:17)

 44. பரமதேசம்

(எபி 11:16 )

45. பண்படுத்தாத தேசம்

(யோசு 24:13)

 46. பள்ளதாக்குகளுள்ள தேசம்

(உபா 11:11 )

47. பாலும், தேனும் ஒடும் தேசம்

(உபா 26:9)

 48. பிதாக்களின் தேசம்

(ஆதி 31:3)

 49. பிள்ளைகளின் தேசம்

(எண் 14:31)

 50. புற ஜாதிகளின் தேசம்

(சங் 105:45)

 51. பெலிஸ்தரின் (பாலஸ்தினா) தேசம் (செப் 2:5- 1 ராஜா 4:21)

 52. நலமும் விசாலமுமான தேசம்

(யாத் 3:8 )

53. நல்ல சுதந்திர தேசம்

(எரே 3:19)

54. நான் பார்த்து வைத்த தேசம்

(எசே 20:6)

 55. நான் காண்பிக்கும் தேசம்

(ஆதி 12:1)

56. நான் கொடுக்கும் தேசம்

(யோசு 1:2)

 57. நீதியுள்ள தேசம்

(ஏசா 26:10)

 58. மலைத் தேசம்

(யோசு 17:17 )

59. மகா நல்ல தேசம்

(எண் 14:7)

 60. மலடில்லாத தேசம்

(யாத் 23:25)

 61. மோரியா தேசம்

(ஆதி 22:2)

 62. வலது கரம் சம்பாதித்த தேசம்

(சங் 78:54)

 63. வானத்தின் மழை தண்ணீரை குடிக்கும் தேசம்( உபா 11:11)

 64. வாக்குத்தத்தம் பண்ணின தேசம் (எசே 20:16 )

65. விஸ்தாரமான தேசம்

(1 நாளா 4:40)

 66. விசாலமும் செழிப்புமான தேசம் -(நெகே 9:35 )

67. யூதா தேசம்

(நெகே 2:5)

 68. யூதேயா தேசம்

(லூக் 1:5 )

69. யோசேப்பினுடைய தேசம்

(உபா 33:13)

 70. ஜீவனுள்ளோர் தேசம்

(சங் 52:5)


Taken from - Sam Gurubatham






Post a Comment

1 Comments

  1. Very useful thought from the Bible. thank you so much pastor.

    ReplyDelete