பார்வையடைய வேண்டும் (Daily Devotion)

 Daily Devotion

பார்வையடைய வேண்டும்


(லூக்கா 18:31-43)


நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்" . லூக்கா 18:41


"நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய்" என்று தன்னிடம் கேட்ட இயேசுவுக்கு, 

நான் பார்வையடைய வேண்டும் என்று பதில் சொன்ன குருடனின் அற்புதமான பதிலால்,

 வியந்து போன

 இயேசு அப்படியே அவனுக்குச் செய்ய,பார்வையடைந்தவனாய் சந்தோஷமாய்ப் போனான். அந்தக் குருடன் போகிறவர்கள், வருகிறவர்களிடமிருந்து "ஏதாவது" கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழியருகே அமர்ந்திருந்த பிச்சைக்காரன் அவன்.

 வழியிலே போகிறவர்களிலும், வருகிறவர்களிலும் சிலர் அவனுக்குப் பிச்சைப்

 போட்டிருக்கலாம், சில

 நன்மைகளையும் அவர்களிடம் அவன் பெற்றிருக்கலாம். அப்படியிருக்கும் போது, இயேசுவிடம் மட்டும் காசு பணம் எதையுமே கேட்காமல் பார்வையடைய வேண்டும் என்று கேட்டதன் காரணம் என்ன?


யார் யாரிடம் என்ன கேட்க வேண்டும் என்ற அறிவும் தெளிவும் அவனுக்கு இருந்தது. மட்டுமல்லாமல், யார் யாரால் என்ன செய்யமுடியும் என்கிற அறிவும் அவனுக்கு இருந்தது.


 இந்த இரண்டும் யார் ஒருவருக்கு இருக்கிறதோ, அவர்களே சிறந்தவர்கள், அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள் மனிதர்களால் சில பணங்களை மட்டுமே தனக்குத் தர முடியும், 

ஆனால் பார்வை அளிப்பது இயேசுவால் மட்டுமே முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான்


தேவனுடைய பிள்ளையே! தேவனால் மட்டுமே தர முடிகின்ற, ஆசீர்வாதம் சமாதானம், சந்தோஷம், நித்திய ஜீவன் இவைகளை நாம் தேவனிடம் மட்டுமே தேட வேண்டும். மனிதர்களால் என்ன முடியும்... ஒன்றும் முடியாது,

 எனவே நாம் நம்முடைய எல்லாவற்றிற்காகவும் தேவனைத் தேடி, தேவனையே சார்ந்து கொள்ள வேண்டும்


தேவனால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நாம் அறிந்திருந்தால் நிச்சயம் நம்முடைய கண்களும், கரங்களும் எப்போதும் அவரையே எதிர்பார்த்துக் காத்திருக்கும். நாம் தேவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, தேவன் நம்முடைய தேவைகளை அவர் சந்தித்து, நிரந்தரமான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நமக்குத்தந்து, ஆசீர்வதிப்பார்….


"ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜிவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே"

(யோவான் 6:68)....Amen

Post a Comment

0 Comments